பிரச்சினையையும், நடிகை பத்மப்ரியாவையும் பிரித்துப்பார்க்க முடியாது. எங்கு சென்றாலும் ஒரு ஆயிரம், ரெண்டாயிரம் செலவழித்தாவது பிரச்சினையை விலை கொடுத்து வாங்கி வருவார்.
தற்போதைய லேட்டஸ்ட் பஞ்சாயத்து ‘நம்பர் 66, மதுர பஸ்’ படத்தின் இயக்குனருடன்.
இது தொடர்பாக மளையாள தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் தந்த இயக்குனர் எம்.ஏ. நிஷாத், ’படத்திற்கு ஏற்கனவே பேசிய சம்பளத்தை விட ரெண்டு லட்சம் அதிகம் தந்தால்தான் இறுதி நாள் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தனது மேனேஜர் விவேக் மூலம் பத்மப்ரியா ப்ளாக்மெயில் செய்து வாங்கியதாகவும், அதை திருப்பி வாங்கித்தருவதோடு நில்லாமல், நடிகர், நடிகைகள் மேனேஜர்கள் வைத்துக்கொள்ளும் கலாச்சாரத்தை மலையாள சினிமாவை விட்டே அகற்றவேண்டும் என்றும் கடுமையாக ரியாக்ட் பண்ண இப்போது மொத்த இண்டஸ்ட்ரியும் பத்மப்ரியாவால் பற்றி எரிகிறது.
ஒரு சின்ன பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பாராத பத்மப்ரியா, தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பிய விளக்கக் கடிதத்தில், ‘’ நான் ஒரு மிகவும் பொறுப்பான, சினிமாவுக்காக என்னையே தியாகம் செய்துவரும் உத்தமியான நடிகை. என்னைப்பற்றி எம்.ஏ.நிஷாத் வேண்டுமென்றே அவதூறுகிறார். ’நம்பர் 88, மதுர பஸ்’ படத்திற்காக நான் எக்ஸ்ட்ரா சம்பளம் எதுவும் கோரவில்லை’’ என்று எழுதியிருந்தாராம்.
கடிதத்தை படித்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ‘ இவளுக்கு நடிக்கிற படத்தோட பஸ் நம்பரையே ஒழுங்கா எழுதத்தெரியல. இதுல சினிமாவுக்கு தியாகம் செய்ய பொறந்தாளாம்’ என்று நக்கலடித்தார்களாம்.
பாத்துமா ப்ரியா, சொந்த வாழ்க்கைப் பயணத்துல, ஏதாவது பஸ் நம்பர் மாறிகீறி ஏறி வேற ஊருக்குப்போயிரப்போறீங்க?