ஒரு படம் தயாரிக்கத் துவங்கும்போது கட்டிப்பிடித்தபடி, பாசப்பிணைப்போடு இருக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படம் முடிவுக்கு வரும் தறுவாயில் கட்டி உருள ஆரம்பித்திருப்பார்கள். பின்னர் ரிலீஸாகி படம் வெற்றி பெற்றுவிட்டால் மறுபடியும் பாசக்காரப்பயலுகளாக மாறிவிடுவார்கள். இது சினிமாவில் காலங்காலமாக நடந்துவரும் கூத்து.
ஆனால் உதயநிதியின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ யைப்பொறுத்தவரை எல்லாமே தலைகீழாக நடந்து வருகிறது. படம் ரிலீஸாகி பல வாரங்கள் ஆன நிலையில் அதன் இயக்குனர் ராஜேஷுக்கும், உதயநிதிக்கும் இடையில் பெரும் புகைச்சலும், ஒருவருக்கு ஒருவர் புழுதிவாறித் தூற்றலும் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் நகுகின்றன.
பிரச்சினைதான் என்ன?
படம் கமிட் ஆகும்போது ஓரளவு சுமாரான சம்பளத்துக்கே ஒத்துக்கொண்ட ராஜேஷ், படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி என்றவுடன், வெகுமதியாக உதயநிதியிடமிருந்து பெரும் நிதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சாதாரண காரே வாங்க முடிகிற அளவுக்கு சில லட்சங்களையே தந்தாராம். அத்தோடு நில்லாமல் விரைவில் படம் இயக்க தயாராகிக்கொண்டிருக்கும் தனது மனைவியின் கதைக்கு வசனம் எழுதித்தரச்சொன்னாராம்.
அதுபோக, அடுத்த படமும் உதயநிதியை வைத்தே, ராஜேஷ் இயக்க தயாராக இருந்த போதும், சுந்தர்.சி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன் போன்ற டைரக்டர்களிடம் கதை கேட்டு வெறுப்பேத்தியிருக்கிறார் உதயநிதி.
எனவே,’ வேணாம் மச்சான் வேணாம் நம்ம காம்பினேஷனே’ என்றபடி துண்டை உதறித்தோளில் போட்டபடி வேறு நடிகர்களுக்கு கதைசொல்லும் முடிவை எடுத்துவிட்டாராம் ராஜேஷ்.