பார்க்க விளையாட்டுப்பிள்ளைப் பிள்ளைபோல் காட்சி அளிக்கும் ஆர்யா என்கிற ஜம்ஷெத், ரம்லான் மாதங்களில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இஸ்லாமிய மத வழக்கப்படி, ஐந்துவேளை தொழுகை செய்து மற்ற சடங்குகளையும் செவ்வனே செய்யும் தீவிரமான முஷல்மான்.
இந்த ரம்ஜானுக்கு, செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில் ஜார்ஜியாவில் மாட்டிக்கொண்ட ஆர்யாவுக்கு, தனது அம்மா ஜமீலாவின் கைப்பக்குவத்தில் வருடாவருடம் சாப்பிடும் பிரியாணியை மிஸ் பண்ணுகிறோமே என்பதில் ஒரு சின்ன வருத்தம்.
‘’ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இங்கு நிலவும் எதிர்பாராத தட்பவெப்ப நிலைகளால், ரம்ஜானுக்குள் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கை கடந்தவாரமே போய்விட்டது. ஆனாலும் ’வேலை முக்கியம்’ என்பதால், ஊருக்குப் போகமுடியவில்லை என்பது குறித்து எனக்கு எந்தவித புகாரும் இல்லை.
ஆனாலும், இத்தனை வருட காலத்தில் ரம்ஜான் தினத்தன்று, நான் என் அம்மாவையும், அவர் ஒவ்வொரு ரம்ஜானுக்கும் தயாரிக்கும் பிரியாணியை மிஸ் பண்ணியதில்லை. ஒவ்வொரு வருடமும் அவர் தயாரிக்கும் பிரியாணியில் புதிய முயற்சி ஏதாவது கண்டிப்பாக இருக்கும். வருடந்தோறும் சினிமா நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும், என் நண்பர்கள் அனைவர் வீட்டுக்கும் என் அம்மா தயாரிக்கும் பிரியாணி தவறாமல் போய்விடும். இந்நேரம் விஷால் போன்ற நண்பர்கள் என் வீட்டு பிரியாணிக்காக காத்திருக்க ஆரம்பித்திருப்பார்கள். நான் சென்னையில் இல்லையே என்ற குறையை என் அம்மாவுக்கு தீர்க்க என் நண்பர்கள் பலபேர் இருக்கிறார்கள்’’ என்கிறார் ஆர்யா உருக்கமாக.
இங்கருந்தே ஜார்ஜியாவுக்கு கேக்குற மாதிரி வாழ்த்துறோம்,’ இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் ஆர்யா.