’நான்ஸ்டாப் நான்சென்ஸ்’ போல் சதாசர்வகாலமும் சண்டைகளால் நாறி, சமீபகாலமாக, சற்றே அமைதி நிலவி வந்த தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், மீண்டும் பெரும்புயல் வீச ஆரம்பித்திருக்கிறது.
தேர்தலில் நடந்த குழறுபடிகளுக்கு, யாரை எப்படி பழிவாங்குவது என்று தவித்த ஒரு அணியினர், மவுண்ட் ரோட்டின் நான்கு திசைகளிலும் ரூம் போட்டு யோசித்ததில், அவர்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா கிடைத்தது. அதன்படி கடந்த ஆண்டு சங்கத்துக்கு சந்தா கட்டாத உறுப்பினர்களை எந்தவித முன்னறிவுப்புமின்றி நீக்கிவிட முடிவு செய்து, அப்படி கட்டாத 46 மெம்பர்களின் பெயரைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு கடிதமும் அனுப்பி விட்டனர்.
இந்தப்பட்டியலில், பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் பெயரும் இடம் பெற்றதை, பொதுவான உறுப்பினர்கள் பலரும் விரும்பாத நிலையில், சர்வதேச கோமாளி தங்கர்பச்சான் பெயரும் இடம் பெற்றிருந்ததை அனைவருமே கைதட்டி வரவேற்றார்களாம்.
‘தயாரிப்பாளர்னு தன்னோட பெயரைப்போட்டுக்கிட்டு கிடைக்கிறவனுகளை எல்லாம் மொட்டை அடிக்கிறவருதான தங்கர். அதனால அவரை நீக்குறதுங்குறது வேலுநாயக்கர் பாஷையில சொல்றதாருந்தா, ‘நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா ஒருத்தர நீக்குறது தப்பில்ல’ என்று கமெண்ட் அடிக்கிறார்களாம்.
ஆனால் இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு கொதித்துப்போன தங்கரோ, ‘ நான் பச்சை,மஞ்சள் சிவப்புத்தமிழன். என்னோட பேக் கிரவுண்ட் என்னன்னு தெரியாம எனக்கு நீக்கல் கடிதம் அனுப்பியிருக்காங்களாம்.
இதை மட்டும் உடனே வாபஸ் வாங்கலைன்னா, லட்சக்கணக்கான தமிழர்களைத்திரட்டிக்கிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தையே கைப்பற்றுவோம்’ என்று உறுமுவதாக தகவல்.
ஒரு டம்ளருக்கு இன்னொரு டம்ளர் ஒத்தாசையா இருக்கனும்ங்கிற அடிப்படையில சொல்றோம், ‘இப்பிடியெல்லாம் செறுமுறுதை விட்டுட்டு, தயாரிப்பாளர் சங்க மாடியில நீங்க ஒத்த ஆளா நின்னு குதிக்கப்போறேன்னு மிரட்டுனாலே அடிபணிவாங்க தம்ளர்பச்சான். உடனே செய்வீங்களா?