’மேடையில் கொஞ்சமாகப் பேசுங்கள். உங்கள் இண்டலெக்ஷுவல் இமேஜ் தரைமட்டத்துக்கு தகர்ந்து கொண்டே வருகிறது’ என்று எவ்வளவோ பேர், எத்தனையோ முறை எச்சரித்தும் ’மிர்ரர்மேன்’ மிஷ்கின் கேட்பதாக இல்லை.
கடந்த சனியன்று, பிரசாத் லேப் தியேட்டரில் காரணகாரியமின்றி ‘முகமூடி’ படத்துக்கு மீண்டும் ஒரு பிரஸ்மீட் வைத்தார்கள். பத்திரிகைகளில் மிஷ்கினுக்கும், தயாரிப்பாளர் தனஞ்செயனுக்குமிடையில், மீண்டும் மீண்டும் அடிதடி. ஏழெட்டு செல்போன் உடைந்தது’ என்று அடிக்கடி எழுதுவதாலோ என்னவோ, அநியாயத்துக்கு அவரை உரசிக்கொண்டே அழைந்தார் தனஞ்செயன்.
வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட்டதாகச்சொல்லி படுசப்பையாக இரண்டு பாடல்களை திரையிட்டார்கள். வழக்கம்போல் தனஞ்செயன், வழவழ கொழகொழவென உளறிக்கொட்ட, அடுத்து மிஷ்கின் மைக்கைப்பிடித்தார்.
‘’ பத்திரிகையாளர்களுக்கெல்லாம் ஒருவாரத்துக்கு முந்தியே சொல்லிட்டு, நேத்து நைட்டு மூனு மணிக்குத்தான் தனஞ்செயன் இப்பிடி ஒரு திடீர் பிரஸ்மீட் ஏற்பாடு பண்ணியிருக்கதையே எனக்குச்சொன்னார். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான கதை. ஒரு பாட்டி கதையை இன்னக்கி ட்ரெண்டுல சொல்லியிருக்கேன். அதனால முந்தி குழந்தையா இருந்து இப்ப பாட்டியானவங்களும், எதிர்காலத்துல பாட்டியா ஆகப்போற குழந்தைங்களும் பாக்கவேண்டிய படம் இது.
ஜீவாவுக்கு போட்ட முகமூடியோட வெயிட் பதிமூனு கிலோன்னு நேத்துதான் எனக்கே தெரிஞ்சது’ என்று தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக உள்றிக்கொட்டியவர் உச்சபட்சமாக,’ என்னோட முகமூடி ‘படத்தோட கதை என்னன்னு நேத்துதான் எனக்கே புரிஞ்சது’ என்றபோது பத்திரிகையாளர்கள் கைகொட்டிச்சிரித்தார்கள்.
உங்க கதை என்னன்னு வெளங்குறதுக்கு, மாபெரும் சினிமா மேதையான உங்களுக்கே ஒரு வருஷம் ஆச்சின்னா, சாதாரண பாமர ஜனங்களுக்கு எவ்வளவு காலம் ஆகுமோன்னு கவலையா இருக்குங்க எசமான்.
ஒருவேளை உலகத்தொலைக்காட்சிகள்ல முதன்முறையா போடுறப்பயாவது வெளங்குனா உங்களுக்கு புண்ணியமாபோகும். ஏதோ பாத்துச்செய்யிங்க.