‘ ஒரு மாபெரும் காமெடிக்கலைஞனை, இப்படி வருடக்கணக்கில் வீட்டில் குவார்ட்டர் அடித்தபடி குப்புறப்படுக்கவைத்துவிட்டார்களே’ என்று வடிவேலுக்காக, இணையதளங்களில் முராரி பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு, ஒரு இனிய செய்தி.
அநேகமாக, நாளை ஜெயல்லிதாவின் காலில் விழுந்து பாவமன்னிப்பு கோரவிருக்கிறார், தேர்தலின்போது நாறவாயராக இருந்து, தற்போது வேறவாயராக மாறியிருக்கும் வடிவேலு.
ஜெயா டி.வி. துவங்கி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி, நாளை நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் திரையுலகின் முக்கியப்புள்ளிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பது அம்மாவின் அன்பு ஆணை.
வாய்ப்புகள் அந்தா வரும், இந்தா வரும்’ என்று காத்திருந்து நொந்தவராம் வடிவேலு, இனியும் காத்திருந்தால், ‘கஞ்சி குடிப்பதற்கிலார். அதன் காரணங்கள் இன்னவென்று அறியவும் இலார்’ என்கிற துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுவோம் என்றுணர்ந்து ‘அந்த துணிச்சலான’ முடிவை எடுத்து அம்மாவுக்கு தூது அனுப்பியிருக்கிறார்.
‘எந்த ஜனங்களின் மத்தியில் அம்மாவைப்பற்றி தரக்குறைவாக பேசினேனோ, அதே ஜனங்கள் முன்னிலையில் அவரது காலில் விழுந்து கதறி மன்னிப்புக் கேட்கிறேன்’ என்பது வடிவேலு அனுப்பிய சமரசத் தூதின் சாரம்சம்.
நிமிடத்துக்கு நிமிடம் இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டிருக்க, அம்மாவின் பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார் வடிவேலு.