vijayakant-ramjaan
ஆயிரம் நகைச்சுவை கட்டுரைகள் படித்தபோது கிடைக்காத ஆனந்தம் கேப்டனின் இந்தப்படங்களை ரசித்தபோது கிடைத்ததுஎன்ற கமெண்டுடன் நமது நண்பர் ஒருவர் ட்விட்டரில் கேப்டனின் இந்த ஸ்டில்களுக்கான லிங்கை கொடுத்திருந்தார்.

ஆடிய வாயும், பிரியாணி தின்ன பாயும் சும்மா இருப்பார்களா?

‘வறுத்த கறிக்கு அப்புறம் படம் எதிலும் நடிக்கமுடியாமல் போனவெறியை கேப்டனின் இந்த ஒவ்வொரு போஸ்களிலும் கண்டேன். ஒவ்வொரு ஸ்டில்லுமே ஒரு முழு நீளப்படம் பார்த்த திருப்தியை தருவது உறுதி.

அதுவும் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் கேப்டனை பார்க்கிறபோது, ‘என்னது எம்.ஜி.ஆரு செத்துட்டாரா?என்று இனிமேல் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.

பாய் கெட்டப்பில் கேப்டனை பார்க்கும்போது, ரம்ஜான் பிரியாணியை நினைத்து வெறிகொண்ட வேங்கையாய் மாறி கறிதிங்கும் ஆசையை கண்டுகொள்ளமுடிகிறது.

வக்கீல் கெட்டப்பில் அவரைப்பார்க்கும்போது, குற்றவாளிகளின் வயிறு கலங்குவது நிச்சயம்.

பட்டதாரி கெட்டப்பில் கேப்டனை பார்க்கும்போது ஒரிஜினல் பட்ட்தாரிகள் ஒண்ணுக்குப் போயே தீரவேண்டும்.

கேப்டனின் இந்தப்படங்களைப் பார்க்கிறபோது இன்னும் என்னென்னவோ சொல்லவேண்டும்போல் தோணுகிறது.

ஐயகோ என் செய்வது? வார்த்தைகள் கிட்டாத வறியவனாகி நிற்கிறேன்.

இங்கே பார்த்து மகிழுங்கள் கேப்டனின் புதிய அவதாரங்களை..

vijayakant-reentry

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.