சின்னத்திரைகளில் இப்போது நம்மை, என்னென்னவோ ஆக்குவதற்கு எப்படியெல்லாமோ அழைத்துக்கொண்டிருக்கும் வேலையில், நடிகர் சிபி சத்யராஜ், இயக்குகுனராக்குகிறேன். வாருங்கள் ‘என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
சிபிராஜ் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘நாணயம்’. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிள்ளை சரண் தயாரிப்பில் வந்த அந்தப்படமும், சிபியின் மற்ற படங்கள் போலவே, கேண்டீன் சமோசா வசூலைவிட மோசமாக வசூலித்து ஊத்திக்கொள்ளவே, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், வேறு வேலை இருந்தால்கூட சிபியின் தெருவழியே போவதைத் தவிர்த்து, ரெண்டு தெரு தள்ளியே போய்வந்தார்கள்.
இந்நிலையில், ஏற்கனவே சொந்த பேனரில் ஒரு படம் எடுத்து நொந்துபோயிருந்த தந்தை சத்யராஜை, சிபி எவ்வளவோ நச்சரித்தும் அவர் படம் தயாரிக்க முன்வரவில்லையாம். இதனால் ஒரு கட்டத்தில் தந்தையின் மீது ஆத்திரமடைந்த சிபி,’’ விஜய் அப்பால்லாம் தொடர்ந்து நாலஞ்சி படம் எடுத்ததுனாலதான அவரால நடிகரா தாக்குப்பிடிக்க முடிஞ்சது. அதனால அடுத்த படம் எடுங்க.இல்லைன்னா என் சொத்தைப்பிரிச்சிக் குடுங்க’ என்று சீரியஸ் மூடுக்கு மாறவே, எதற்கு வீண் விபரீதம் என்று யோசித்த சத்யராஜ், ‘’ நீயே கதை கேட்டு உன் இஷ்டத்துக்கு படம் பண்ணிக்கப்பா’ என்று ஆசி வழங்கிவிட்டாராம்.
இதைத்தொடர்ந்து, குறிப்பாக, புதுமுக இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டுவரும் சிபி, மிக விரைவிலேயே தனது சொந்த தயாரிப்பை அறிவிக்கப்போகிறாராம்.
‘ எனக்கு என்ன பிசினஸ் இருக்கு?. கதையோட பட்ஜெட் என்னங்கிறதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம நல்ல கதையா சொல்லுங்க. உங்களை டைரக்டராக்கி அழகு பாக்குறது என்னோட பொறுப்பு’ என்கிறார் சிபி.
புதுமுக டைரக்டர்களை ஆதரிக்கனுமுன்னு நினைக்கிறதால, சிபி சீக்கிரமே தலைகீழா பிசி ஆக வாழ்த்துக்கள்.
அப்பிடியே படத்துல ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?’ பாட்டை மட்டும் ரீ-மிக்ஸ் பண்ணி அப்பாவை கெஸ்ட் ரோல் பண்ண விட்டீங்கன்னா படம் பிச்சிக்கும் சிபி.