‘எடுத்தால் விஸ்வரூபம்’ படுத்தால் பரதேசி’ இதுதான் தமிழ்சினிமாவின் இப்போதைய நிலை.
’ கதையாவது கண்றாவியாவது. நீ முப்பது கோடி பட்ஜெட்டுல படம் எடுக்குறியா? நான் அறுபது கோடியில எடுத்து, படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் அழிக்கிறேன்’. இதுதான் வெற்றி பெற்ற அத்தனை டைரக்டர்களின் மனநிலையும்.
இந்த விபரீத விளையாட்டுக்களால், வரும் தீபாவளிக்குள்ளாக மட்டும், தமிழ்சினிமா சுமார் 600 லிருந்து 400 கோடி வரை இழப்பை சம்பாதிக்கப்போகிறது.
இந்த தீபாவளி மற்றும் அதற்கு முன்பாக வரக்காத்திருக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் பட்டியலை மட்டும் கொஞ்சம் கவனியுங்கள்.
கமலின்’விஸ்வரூபம்’ ரஜினியின்’ சிவாஜி3டி’ மற்றும் ‘கோச்சடையான்’ சூர்யா-கே.வி.ஆனந்தின் ‘மாற்றான்’ விஜயின் ‘துப்பாக்கி’ விக்ரமின் ‘தாண்டவம்’ ஜெயம் ரவியின் ‘ஆதிபகவன்’ பாலாவின் ‘பரதேசி’ கார்த்தியின் ’அலெக்ஸ் பாண்டியன்’ சிம்புவின் ‘போடா போடி மற்றும் ‘வாலு’ செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவின் ‘சேட்டை மற்றும் கவுதம், ராஜா கூட்டணியின் ‘நீ தானே என் பொன் வசந்தம்.
இந்த மெகாபட்ஜெட் படங்கள் போக, கும்கி, தங்கமீன்கள்,நீர்ப்பறவை போன்ற மீடியம் மற்றும் ’அம்மாவின் கைப்பேசி’ போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நாற்பதுக்கும் மேல் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
இப்படி படங்கள் தேவைக்கும் அதிகமாக தேங்கிக்கிடப்பதால், விநியோகஸ்தர்கள் யாரும் படங்களை வாங்குவதற்கு முன்புபோல் ஆர்வம் காட்டுவதில்லை.
மற்றவர்களை விடுங்கள். கமல் தனது ‘விஸ்வரூபத்தை’ 120 கோடியில் ஆரம்பித்து, தற்போது வந்தவிலைக்கு எப்படியாவது விற்றுவிடவேண்டுமென்று ‘மூன்றாம் பிறை’ க்ளைமேக்ஸில் அடித்ததையும் விட அதிக பல்டி அடித்துப்பார்த்துவிட்டார். நத்திங் டூயிங்.
அதையும் தாண்டி பரிதாபமானது ‘பரதேசி’ பாலாவினுடையது. அதர்வாவை வைத்து இவர் இயக்கியிருக்கும் ‘பரதேசி’ ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில், 25 கோடியில் துவங்கி, தற்போது அதில் பாதிவிலையில் யாருக்காவது விற்றுவிட முடிவுசெய்து, இவர் எடுத்த முயற்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிய, மெல்ல சேது’வாக மாறிக்கொண்டிருப்பதாக செவிவழிச்செய்திகள்.
நிலைமை இப்படியே நீடித்தால் தீபாவளிக்குப்பிறகு, தயாரிப்பாளர்கள் கோரஸாக ‘பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தோம், ரசிகனே தமிழ் ரசிகனே’ என்றுபாடவேண்டிய சூழல் ஏற்பட்டால் ஆச்சரியப்படவேண்டியதில்லை.