டியர் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் வரும் தீபாவளியன்று நாம் யாரும் புத்தாடை உடுத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், ’அன் அக்டோபர் ரிலீஸ்’ என்று வெள்ளைக்காரன் ஸ்டைலில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்த பாலாவின் ‘பரதேசி’ ரிலீஸ், அக்டோபரிலிருந்து, தீபாவளிக்கு அதிகாரபூர்வமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது.
அக்டோபரிலிருந்து படம் தீபாவளிக்கு தள்ளிப்போக காரணம்? பாலாவின் ‘நந்தா’ சூர்யாதான். ‘பரதேசி’யின் பிசினஸ் நிலவரம் ஏற்கனவே படுமந்தமாக இருந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட, சூர்யாவின் ‘மாற்றான்’ அக்டோபர் 12 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டவுடன், பாலா அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாராம்.
மாற்றானுக்கு 500க்கும் மேல் தியேட்டர்கள் கிட்டிய நிலையில், ‘பரதேசி’க்கோ ‘’போயிட்டு அப்புறமா வாப்பா’’ என்று தியேட்டர்கள் தரப்பில் ரெஸ்பான்ஸ் இருக்க, 86 கோடிக்கு பரபரப்பாக விற்கப்பட்ட ‘மாற்றானுடன்’ பரதேசி’ மோதுவதென்பது, ஆளில்லாத பாலைவனத்தில் போய் பிச்சை எடுப்பதற்கு சமம் என்பதை புரிந்துகொண்ட பாலா, சற்றும் ஈகோ பார்க்காமல் பட ரிலீஸை தீபாவளிக்குதள்ளிப்போட்டுவிட்டார்.
ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் கியூவில் நிற்கும் ‘கோச்சடையான்[?], ‘துப்பாக்கி’ வாலு’ நீதானே என் பொன் வசந்தம்’ ஆகியவற்றுடன் இப்போது ‘பரதேசி’யும் நிற்க ஆரம்பித்திருப்பது தீபாவளியை களைகட்ட வைத்துள்ளது.
அடிப்படையில் இளகிய மனம் படைத்த தமிழர்களான நாம் ஒரு ‘பரதேசி’யை பார்க்கப்போகும் போது பகட்டாக புத்தாடை அணிந்து பரிகாசம் பண்ணமுடியுமா? வேறு வழி, தீபாவளிக்கு அடுத்த நாள் புத்தாடைகளை அணிந்துகொள்ளவேண்டியதுதான்.