தமிழில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆந்திராவில் செட்டிலாகி, அங்கே ஓரளவுக்கு சுமாராக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். தமன், தனது பாடல்களை ஹிட்டாக்க அடிக்கும் பல்டிகள் குறித்து காமெடியான பல கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
முன்பு ‘மகதீரா’ படத்தின் ஒரு பாடல், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்குத்தெரியாமலேயே இணையதளங்களில் லீக்காகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பாலேயே அந்த பாடல் பெரும் ஹிட்டாகிவிட, ஆந்திர சினிமாவில் கொஞ்சம் பிஸியானார் தமன்.
பின்னர், அவர் டியூனை உருவும் சி.டி.க்களை சுலபத்தில் கண்டுபிடிக்க முடிந்ததால், பழையபடி அவரது ஸ்டுடியோ டல்லடிக்க ஆரம்பித்தது.
சரி வேறு வழியில்லை. மீண்டும் பழைய டெக்னிக்கை கையாளவேண்டியதுதான் என்று முடிவெடுத்த தமன்,கடந்த வாரம், தான் இசையமைத்து வரும் ‘பாதுஷா’ படத்தின் ஒரு பாடல் எப்படியோ லீக் ஆகிவிட்டதாகவும், ’’இப்படியெல்லாம் பண்ணினால் எங்களது கடின உழைப்பு வீணாகிறதே. தயவு செய்து லீக் ஆகியுள்ள அந்தப்பாடலை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்’’ என்று தனது ட்விட்டரில் டெக்னிக்கலாக கெஞ்சுகிறார்.
பாட்டு லீக்கானா கம்முன்னு கெடக்க வேண்டியதுதான, இவரே ஏன் லிங்கெல்லாம் குடுத்து சங்கெடுத்து ஊதுறாரு? என்று கேள்விகள் கிளம்ப ஆரம்பிக்க, ‘அவ்வ்வ்’ கண்டுபுடிச்சிட்டாங்களா என்று சங்கடத்தில் நெளிகிறாராம் சங்கீதம் வித்தவன்.