அரை நூற்றாண்டு கால கலை வாழ்வில் அற்புதமான பல கதாபாத்திரங்கலில் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டமிர்ந்த திலகன் என்ற மாபெரும் கலைஞன் இன்று மரணமடைந்தார்.
மூணாம்பக்கம்,கிரீடம் ,பெருந்தச்சன், ஸ்படிகம்,செங்கோல் என்று பல நூறு படங்களில் நடித்த திலகன்,தான் நடித்த திரைப்படங்க்ளிலெல்லாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களை தன் அழகான நடிப்பால் எதார்த்த மனிதர்களாகவே நம் கண்முன் நிறுத்தினார்.
தேசிய விருதுகளையும் ஆறு முறை மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருந்தாலும் விருதுகளுக்கு அப்பாற்பட்ட கலைஞனாகவே அவர் வாழ்ந்தார்.
நான் கடைசியாய் பார்த்த திலகன் நடித்த படம் ‘இந்தியன் ருபீ’(INDIAN RUPEE) அப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு கேரள அரசின் சிறப்பு விருது கிடைக்கு மென்று எதிர்பார்த்தேன்.
அப்படம் கேரள அரசின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் திலகனுக்கு விருது கிடைக்கவில்லை..
திலகன் என்ற அந்த மாபெரும் கலைஞனின் மரணம் மலையாள சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் ஒரு பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.
இந்தியன் ருபீ படத்தில் வழிப்போக்கனாய் வரும் திலகனின் நடிப்பை பாருங்கள்.
டி.அருள் செழியன்
https://www.youtube.com/watch?v=kp3k82A2sN0&feature=player_embedded