‘தாண்டவத்தின் தமிழ் ரிலீஸே, கதைத்திருட்டு பிரச்சினையால் ததிங்கிணத்தோம் ஆகிக்கொண்டிருக்க, இதே செப்-28 ரிலீசாவதாக இருந்த தெலுங்கு ‘சிவதாண்டவம்’ பட ரிலீஸுக்கு, அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுவிட்டது.

தாண்டவத்தின் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் சி.கல்யாண் வாங்கியிருந்தார். இதை டப்பிங் படம் என்று அறிவித்தால் அரசுக்கு 30 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும் என்பதால், நேரடி தெலுங்குப்படம், அத்தனை காட்சிகளையும் இரு மொழிகளில் ஷூட் செய்தார்கள் என்று ஆந்திரமாநிலம் முழுமைக்கும், ஒரு முழம் பூவை காதில் சுற்றப்பார்த்தார் கல்யாண்.

இவரது அண்டப்புழுகை கடுமையாக ஆட்சேபித்த சில தயாரிப்பாளர்கள், ஆந்திர பிலிம் சேம்பர் மூலமும், கோர்ட் வாயிலாகவும் தடை வாங்க, இப்போதைக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது இது டப்பிங் படம் தான் என்று கல்யாண் ஒப்புக்கொள்ளும் வரை, தாண்டவத்தை தெலுங்கில் ரிலீஸ் பண்ணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை தமிழில் முன்கூட்டியே ரிலீஸாகி படம் ஊத்திக்கொண்டால், பேசிய விலையில் கால்வாசி கூட யூ.டி.வி. மோஷன் பிக்‌ஷர்ஸுக்கு வந்து சேராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.