‘மான்ஸ்டர்ஸ் பால்’(Monsters Ball) படத்தில் ஆஸ்கர் விருது பெற்றவரும் ‘டை அனதர் டே’ (Die another day)என்கிற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பிரபலமானவருமான ஹாலி பெர்ரி தற்போது டாம் ஹேங்க்ஸூடன்(Tom Hanks) இணைந்து ‘க்ளௌட் அட்லஸ்’(Cloud Atlas) என்கிற ஆங்கிலப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்திற்காக சேலை அணிந்து ஒரு விருந்தில் கலந்துகொள்வது போல நடித்தார். சேலை அணிந்திருந்த அவர், கையில் வளையல்களும் அணிந்து, உள்ளங்கையில் மருதாணியும் இட்டிருந்தார்.
இது பற்றி அவர் கூறியபோது “இந்தியா அதனுள்ளே இருக்கும் எண்ணிலடங்கா படலங்களுடன் கூடிய ஒரு அற்புதமான நாடு. உலகிலேயே மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான இந்தியாவைப் பற்றி அறிவதில் எனக்கு மிகவும் விருப்பமுண்டு. எனக்கு நிறைய இந்திய நண்பர்களுண்டு. தொன்மையான இந்தியா பற்றிய அவர்கள் கூறும் கதைகள் மிக சுவாரசியமானவை”.
இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிற்போக்கானது என்று எள்ளி நகையாடும் மேற்கத்தியவர்கள் இப்படி தொன்மையான இந்தியா பற்றி மட்டும் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.
க்ளௌட் அட்லாஸை எழுதி இயக்கியிருப்பவர்கள் லானா வேக்கோவஸ்கி(Lana Wachowski), ஆண்டி வேக்கோவஸ்கி(Andy Wachowski) மற்றும் டாம் டிக்வர்(Tom Tykwer). மனித குலத்தின் செயல்கள் மூன்று காலத்திலும் ஒன்றையொன்று பாதிப்பதன் விளைவுகளைப் பற்றிய படம்.
அக்டோபரில் வெளிவரவிருக்கும் இப்படத்தை பி.வி.ஆர் நிறுவனம்(PVR Cinemas) இந்தியாவில் வெளியிடுகிறது.