’கோச்சடையான்’ குறித்து கொஞ்சநாட்களாய் செய்திகள் அதிகமாய் காணோமே என்று கவலையில் சரியாய் கஞ்சி குடிக்காமல் அலைந்த ரஜினி ரசிகர்களுல் நீங்களும் ஒருவர் எனில், அந்த கவலைக்கு பைபை சொல்லுங்கள். ஏனெனில் செய்திகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதே உங்க தலைவர்தான்.
‘சிவாஜி 3டி’ அறிமுக விழாவுக்கு வந்த ரஜினி, பிரசாத்தையும், ஏ.வி.எம் நிறுவனத்தினரையும் கண்டு ஒரு விஷயத்தில் அசந்து போனாராம். இவ்வளவு பெரிய காரியத்தை செய்துகொண்டு, மிக சைலண்டாக ஒரு விளம்பரம் செய்துகொள்ளாமல், ‘சிவாஜி 3டி’யை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருந்த விசயம்தான் அது.
உடனே தனது மகள் சவுந்தர்யாவை அழைத்த ரஜினி, ‘’ஐஸ்வர்யாவும் தனுஷும் ‘3’ படத்துக்கு ஓவர் ப்ப்ளிசிட்டி பண்ணியே பாதி ஓஞ்சாங்க. நீயும் அந்த ரூட்ல போகாதே. ஏற்கனவே ‘கோச்சடையானுக்கு ஓவர் பப்ளிசிட்டி வந்தாச்சி. அதுபோதும் இனி ரிலீஸ் சமயத்துல பாத்துக்கலாம்’ என்று அமுக்கி வாசிக்கச்சொன்னாராம்.
ரஜினி பப்ளிசிட்டியை நிறுத்தச்சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இப்போதுள்ள நிலவரப்படி ரிலீஸில் ‘கோச்சடையானை, ‘சிவாஜி 3டி’ முந்த வாய்ப்பிருக்கிறது. அப்படி சிவாஜி 3டி’ முந்தும் பட்சத்தில் ‘கோச்சடையான்’ பற்றிய செய்திகள் மிகவும் பழசாகிவிடும் என்பதும் காரணம்.
அதுசரி, ரஜினி சொன்னாருங்கிறதுக்காக ’கோச்’ பத்தி நாம எதுவும் மூச் விடாம இருக்க முடியுமா?
உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஜப்பான்ல நடக்கப்போற ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக, 200 பத்திரிகையாளர்களை அழைச்சிட்டுப்போறாராமே சவுந்தர்யா? சபாஷ்யா.