ஸ்டீவி வொன்டர் - 1

புகழ்பெற்ற ‘ஐ ஜஸ்ட கால்ட் டு சே ஐ லவ் யூ’(I just called to say I love you), ஸர் ட்யூக்(Sir Duke), ஐ விஷ் (I Wish) போன்ற பிரபல பாடல்களைப் பாடிய அமெரிக்க கறுப்பினப் பாடகரான ஸ்டீவி வொன்டர்தான் இப்படி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
63 வயதான் ஸ்டீவி வொன்டரிடம் புகழ் பெற்ற இளம் பாடகர் ப்ரான்க் ஓஷன்(Frank Ocean) தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன் (Gay) என்று வெளிப்படையாக அறிவித்ததைப் பற்றி தி கார்டியன் பத்திரிக்கையில் கேள்வி கேட்கப்பட்ட போது இவ்வாறு அவர் கூறினார்.

“நிஜமாகவே நான் நினைக்கின்றேன்.. ஓரினச் சேர்க்கையாளன் என்று கூறும் சிலர் உண்மையில் குழம்பிய மனமுள்ளவர்கள். மனிதர்கள் பழகும் போது நெருக்கமாக, மிக அன்னியோன்னியமாக உணரலாம், பாசமாகப் பழகலாம். ஆனால் பல பேர் இந்த நெருக்கமான நட்பு, பாச உணர்வை, பிணைப்பை (bonding) ஓரினச்சேர்க்கை உணர்வாக எண்ணிக் குழம்பிக் கொண்டு விடுகிறார்கள். தாங்களும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள். எல்லா ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் இப்படி இல்லை. சிலருக்குத் தான் நிஜமாகவே ஒத்த பாலினத்தவர் மீது காதல் உண்டாகிறது.”

வழக்கம் போல கே(Gay) மற்றும் லெஸ்பியன்(lesbian) காரர்கள் ஸ்டீவி வொன்டரின் கருத்துக்கு பலத்த ஆட்சேபம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். நம் ஊரில் எதற்கெடுத்தாலும் பெண்ணியம் என்று ஆரம்பிப்பது போல மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கெல்லாம் எல்லா வகையான(!!) சுதந்திரங்களும் வந்து விட்டதால் அடுத்த சுதந்திரமாக ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தைத்(?!) தான் பேசுகிறார்கள்.

ஸ்டீவி வொன்டரின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு அவருடைய ரசிகர்களிடையே இருந்தே கிளம்பியதால் என்னடா இது வம்பாகிப்ஸ்டீவி வொன்டர் - 2 போய்விட்டது என்று உடனே மன்னிப்பு பேட்டி கொடுத்துவிட்டார் ஸ்டீவி வொன்டர்.

அட்வகேட் என்கிற பத்திரிக்கைக்கு இவ்வாறு மன்னிப்பு பேட்டியளித்துள்ளார்.. “காதலின் மகத்தான சக்தியை உலகெங்கும் கொண்டு செல்வதில் என்னைவிட யாரும் இல்லை. என் வாழ்வையும், இசையையும் இதற்காகவே அர்ப்பணித்திருக்கிறேன். காதல் என்பது காதல் தான். அது ஆண்-பெண், பெண்-ஆண், ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் என்று யாராக இருந்தாலும் சரி.”(அப்பா எத்தனை காம்பினேஷன்கள்).

இரண்டாவது பேட்டியில் ஸ்டீவி சொல்லியிருப்பது போல் காதலுக்கு ஒன்றும் அப்படி எதுவும் மகத்தான சக்தி கிடையாது. அது ஒரு தற்காலிகமாய்த் தோன்றும் ஒரு போதை; வியாதி. அதற்கான மருந்து திருமணத்தில் இருக்கிறது – இப்படிச் சொல்லியிருப்பவர் இன்னொரு புகழ் பெற்ற தத்துவ எழுத்தாளர்..

காதலே வியாதி என்றால்.. அப்போ ஓரினக் காதல்? அட ஆளை விடுங்க சார்.

ப்ரான்க் ஓஷன் இவருதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.