கோர்ட்டில் ‘தாண்டவம்’ ரிலீஸுக்கு தடை விதிக்கப்படவில்லை எனினும், அதைவிட மானம் கப்பலேறும் சங்கதிகள் விக்ரம்,யு.டி.வி தனஞ்செயன் மற்றும் இயக்குனர் விஜய்க்கு எதிராக நடந்துள்ளன.
இப்போது ரிலீஸ் பண்ண அனுமதிக்காவிட்டால் ஏற்படும் இழப்பை கருத்தில் கொண்டுதான் ‘தாண்டவம்’ ரிலீஸ் அனுமதிக்கப்படுகிறதே ஒழிய, இது அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக ஒருபோதும் கருத முடியாது.உதவி இயக்குனர் பொன்னுச்சாமியின் கதைக்கும், தாண்டவம்’ கதைக்கும் இடையில் சுமார் 26 காட்சிகள் ஒத்துப்போவதாக, இயக்குனர் சங்க தரப்பில் சிலரிடமிருந்து வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே விசாரனையை இரு வாரங்கள் தள்ளிவைத்துள்ளோமே ஒழிய, இது யூ.டி.வி.க்கு விடுதலை வழங்கும் தீர்ப்பு ஆகாது’ என்ற கோர்ட்டின் தீர்ப்பு, மாப்பு உங்களுக்கு ரெண்டு வாரங்கழிச்சி இருக்கு ஆப்பு’ என்பது போலவே இருக்கிறது.
இதற்கிடையில் பொன்னுச்சாமியின் விவகாரத்தில் கேவலத்திலும் கேவலமாய் நடந்துகொண்ட சங்க செயலாளர் அமீரின் ராஜினாவை, இந்த வருடத்தின் மிகமுக்கியமான நாடகம்’ என்று நக்கலடிக்கின்றனர் உதவி இயக்குனர்கள் ஒட்டுமொத்தமாய்.
அமீர் யூடிவி தனஞ்செயனிடமும், நடிகர் விக்ரமிடமும் விலைபோனதால் தான் பொன்னுச்சாமிக்கு நியாயம் கிடக்கவில்லை என்று கூறி இன்று காலை தங்கள் பொறுப்பை ராஜினாமா செய்த ‘புதிய அலைகள்’ அமைப்பைச்சேர்ந்த பேர் பொன்னுச்சாமி விவகாரத்தில் இயக்குனர் சங்கம், தீர்ப்பைச்சொல்ல்லாமல் காலம் கடத்தியதின் மூலம், கோர்ட்டில் ‘தாண்டவம்’ படத்துக்கு தடை வாங்கமுடியாமல், சட்டரீதியாக எந்தெந்த வழிகளில் துரோகம் செய்யப்பட்டது என்ற பிரச்சாரத்திலுக் இறங்க ஆரம்பித்தனர்.
இவர்கள் பிரச்சாரம் தொடர்ந்தால் எங்கே நாம் விலைபோன விவகாரத்தை வீதிவீதியாக வெளிச்சம் போட்டு விடுவார்களோ என்று பயந்துதான் அமீர் அவசர அவசரமாக ராஜினாமா நாடகம் ஆடியிருக்கிறார்.
இதில் அவர் தரப்பில் ஒரு சதவிகிதமாவது உண்மை இருக்கிறதென்றால் அதை பொதுமேடையில் வைத்து விவாதிக்க ‘புதிய அலைகள்’ தயாராக இருக்கிறார்கள். பெரிய தலை அமீர் தயாரா?