பழைய ‘அமைதிப்படை’ ரிலீஸாகி 18 வருடங்கள் ஆகிவிட்டதென்றாலும், அதில் இடம்பெற்ற அரசியல் நக்கல்களும்,நையாண்டி வசன்ங்களும் என்றும் மறக்கமுடியாதவை.
ஏறத்தாழ அதே கூட்டணியுடன் ‘அ.ப’வின் பார்ட் 2வுக்கு ‘நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ’ தலைப்பு சூட்டி மீண்டும் களம் இறங்கிவிட்டார் இயக்குனர் மணிவண்ணன்.
வி ஹவுஸ் சார்பில் எஸ்.ரவிச்சந்திரன், சுந்தர் இணைந்து தயாரிக்க, டி.சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘’பல வருடங்களாக, எந்த நிகழ்ச்சியில கலந்துகொள்ளப்போனலும், சார் அமைதிப்படை’ மாதிரி இன்னொரு படம் பண்ணுங்க சார்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. எனக்கும் அந்த ஆசை இருந்தாலும் சரியான சந்தர்ப்பம் அமையாம இருந்துச்சி.
அப்ப இருந்த்தைவிட அரசியல் நிலைமை இப்ப இன்னும் பல மடங்கு கேவலமா ஆகிப்போச்சி. அதையும் மனசுல வச்சிதான் ,’நாகராஜ சோழன்’ ஸ்கிரிப்டை பண்ணிவச்சிருக்கேன்’’ என்கிறார் மணிவண்ணன்.
சத்யராஜ்,மணிவண்ணன் கூட்டணியுடன் இம்முறை புதிதாக களம் இறங்குபவர், பார்ட் டைம் சினிமாக்காரரான சீமான்.
சீமான் கடைசியாக ஹீரோவாக நடித்த ‘கண்டுபுடி கண்டுபுடி’ படம் ரிலீஸாவதற்கு தியேட்டர்கள் கண்டுபுடிக்க முடியாததால், ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகி ஆறுமாதங்களுக்கும் மேலான நிலையில் ரிலீஸாகாமல் இருக்கிறது.
ஆனால் நாகராஜசோழனில் சீமான் வில்லங்க அரசியல்வாதியாக [ஒரிஜினல் கேரக்டர்] நடிப்பதால் ரிலீஸ் செய்வதில் சிக்கல் எதுவும் இருக்காது என்பதாக அறியப்படுகிறது.