நடிச்சி நடிச்சி போரடிச்சிடுச்சி, கிசுகிசுக்கள் படிச்சி கிறுக்குப் புடிச்சிருச்சி என்று கொஞ்சகாலமாகவே மன சஞ்சலத்துக்கு ஆளாகியிருந்த டயானா மரியம் குரியன், அதாங்க நம்ம நயன் தாரா மிக விரைவிலேயே டைரக்டராவது என்று முடிவெடுத்துவிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாள இண்டஸ்ட்ரி மொத்தமும் கிடுகிடுங்க வேண்டிய மேட்டரை என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க என்று நீங்க நடுநடுங்குறது புரியுது.
சினிமாவில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, வெறும் நடிகையாக மட்டும் வாழ்ந்து முடிந்துவிட நயன் விரும்பவில்லை. இன்னும் கொஞ்சம் சவுண்டாக எதையாவது சாதிக்கவேண்டுமென்பது அவரது சமீப காலத்தைய விருப்பமாம்.
தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் ஒரு படமும், தமிழில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ‘கர்வம்’ படத்திலும் நடித்துவரும் நயன், படப்பிடிப்பில், தனக்கு ஷாட் இல்லாத நேரங்களில், ஒரு ஹேண்டி கேமராவை கையில் வைத்துக்கொண்டு, மிகத்தீவிரமாக எதையாவது ஷூட் பண்ணியபடியே இருக்கிறார். ஓய்வு நேரங்களில் அவரது கைகளில் எப்போதும் ’திரைக்கதை எழுதுவது எப்படி?’ போன்ற புத்தகங்கள் தவழ்ந்தபடியே இருக்கின்றன.
எப்படியும் 2013-ல் ஒரு படம் இயக்கிவிடுவது என்பதில் உறுதியாக இருக்கும் நயன், கதை, நடிகர், நடிகைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லையாம்.
சிம்பு, பிரபுதேவா காம்பினேஷன்ல நீங்களும் நடிச்சி டைரக்ட் பண்ணுனீங்கன்னா, படம் பூஜை போட்ட பத்து நிமிஷத்துல ஆல் ஏரியா சோல்ட் அவுட் ஆகும். கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க மேடம். கதையும் கூட புதுசா எதுவும் யோசிக்க வேண்டியதில்லை. கன்சிடர் பண்ணுங்க மேடம்.