யோஹன் அத்தியாயம் ஒன்று கைவிட்டுப்போன ’யோகம்’, இன்னும் கவுதம் மேனனை விட்டு விலகவில்லை போலும். அடுத்து சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவதாக இருந்த ‘துப்பறியும் ஆனந்தன்’-படமும் ஏறத்தாழ டிராப் ஆகிவிட்டது.
இரண்டு பாடல்காட்சிகள் மட்டுமே மிச்சமுள்ள ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் கவுதம், சில தினங்களுக்கு முன்பு,2013 ஜனவரியில், சூர்யாவை வைத்து இயக்கப்போவதாக, ‘துப்பறியும் ஆனந்தன்’ பட செய்தியை வெளியிட்டார். அப்படத்துக்கு சூர்யா, 30 கோடி சம்பளம் கேட்டதாகவும், தனக்காக அட்ஜஸ்ட் பண்ணி, அதில் பாதி வாங்கிக்கொள்ளும்படி கவுதம் வேண்டிக்கொண்டதாகவும் சில கச்சடா செய்திகள் நடமாடின.
அப்போது, கதையின் ஒன் லைனை மட்டும் கேட்டிருந்த சூர்யா, கடந்த வாரம் கவுதமிடம் படத்தின் முழுக் கதையையும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்துக்கேட்டார். ஆனந்தன் துப்பறிந்த விதம் சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை.
வழக்கம்போல், ‘கொஞ்சம் டைம் குடுங்க, ரெண்டு நாள் கதையில டிராவல் பண்ணிப்பார்த்துட்டு சொல்றேன்’ என்று கிளம்பிய சூர்யா, ஒரு வாரமாகியும் தனது பதிலை சொல்லாததுடன், ஆர்.ஏ.சி. வெயிட்டிங் லிஸ்டில் இருந்த, இயக்குனர் லிங்குசாமிக்கு சீட் கன்ஃபர்ம் பண்ணி, அடுத்தாக க்ரீன் சிக்னலையும் காட்டிவிட்டார்.
ஹரி இயக்கிவரும் ‘சிங்கம் 2’ படத்துக்கு அடுத்து சூர்யா நடிக்கவிருப்பது லிங்குவின் படத்தில்தான் என்பது உறுதியாகிவிட்டது.
முதலில் அஜீத், அடுத்து விஜய், லேட்டஸ்டாக சூர்யா என்று நோஸ்கட் வாங்கிவரும் கவுதமின் ஃபேஸ்கட் பார்க்க பாவமாகவே இருக்கிறது.