நம்ம தமிழ்சினிமா டைரக்டர்கள் படத்தில் ஒரிஜினல் கதை தேடுவதும்,கடல் நீருக்குள் கருவாடு தேடுவதும், ஹரி படத்தில் லாஜிக் தேடுவதும் ஒன்றுதான்.
சூர்யாவின் மந்திர,தந்திர, பல மாதாந்திர விளையாட்டுக்களையெல்லாம் தாண்டி, ஒருவழியாய் ‘சிங்கம்2’ படப்பிடிப்பை பரபரப்பாய் ஆரம்பித்துவிட்ட ஹரி, இந்தப்படத்தில் ஹன்ஷிகா மோத்வாணியை, ஸ்கூல் மாணவியாய், அதுவும் பத்தாங்கிளாஸ் படிக்கிற பிள்ளையாய் காட்டுகிறாராம்.
பதறாதீங்க..பதறாதீங்க.. அது கதையில் ஒரு கால்மணி நேரத்துக்குத்தானாம். அடுத்து ஸ்கூலில் ஃபெயிலாகி, கட் அடித்து, சூர்யாவைக் கட்டிப்பிடித்து ஆடுகிற குத்துப்பாட்டெல்லாம் கண்டிப்பா உண்டு.
மதுரையில் தற்போது நடந்துவரும் படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான ஒரிஜினல் பத்தாம் வகுப்பு மாணவிகளோடு, நடித்துவரும் ஹன்ஷிகா, ‘’ ஸ்கூல் பிள்ளைகளோட நான் ரெம்ப சந்தோஷமா இருக்கேன். இந்தப்படத்தோட ஷூட்டிங் முடிஞ்ச உடனே, ஆக்டிங்கை ஆஃப் பண்ணிட்டு, பேசாம இந்த ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலாம் போல இருக்கு’’ என்கிறாராம்.
இந்தச்செய்தி அக்கம்பக்கமெல்லாம் பரவி,சுத்தி இருக்குற பதினெட்டுப்பட்டி வாத்தியார்களும், அனுஷ்கா படிக்க விரும்பும் பள்ளிக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டு,சொத்தை அடமானம் வைக்க தயாராகிவிட்டார்களாம்.
நீங்க ஸ்கூல்ல சேர்ந்தா, பின்னாலேயே தனுஷ்,சிம்புல்லாம் வம்பா படிக்க வருவாய்ங்க.
‘சாட்டை’ சமுத்திரக்கனியைத்தான் வாத்தியாரா அனுப்புவோம். ஓ.கே.ஓ.கே.வா ஹன்ஷிகா?