எத்தனையோ விருதுகளை வாங்கி சாதனைகள் படைத்து விட்டபோதிலும், ஓய்வு மனப்பான்மைக்கு வரவிடாமல், தனது ஒவ்வொரு படத்துக்குமே, ‘ ஆடுறா ராமா, ஆடுறா ராமா’ என்று குட்டிக்கரணம் அடிக்கவேண்டிய நிலைமை கமலுக்கும் கூட இருக்கத்தான் செய்கிறது.
இதுவரை, எந்த ஏரியாவும் விலைபோகாமல் இருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை, தனது பிறந்த நாளான நவம்பர் 7 அன்று, ஒரே நாளில் மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று ஊர்களில் நடத்த முடிவு செய்துள்ளாராம் கமல்.
‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக ராஜ்கமல் அலுவலகத்திலிருந்து வரும் செய்திகள் தவிர்த்து, குறிப்பாக, ஹல்லோதமிழ்சினிமா.காம் செய்திகள் உட்பட, எதையும் நம்பவேண்டாம்’ என்று கமல் கேட்டுக்கொண்டதன் பிறகு, ராஜ்கமலிலிருந்து வந்திருக்கும் அதிகாரபூர்வமான செய்தி இது.
அப்படி ஆடியோ வெளியிடப்படும் மூன்று ஊர்களிலுமே கமலும்., ஆண்ட்ரியாவும் இருக்கவேண்டி, கமல் விரும்பியதன் விளைவாக ஒரு தனி விமானத்தை வாடகைக்கு எடுக்கிறார்களாம்.
இந்த விமானத்தை அநேகமாக கமலின் பி.ஆர்.ஓ.,’குட்டிசகலகலாவல்லவன்’ திகில் முருகனே ஓட்டக்கூடும் என்று, ராஜ்கமல் அலுவலத்தின் பக்கத்து காம்பவுண்டிலிருந்து, பவ்யமான செய்தி ஒன்றும் வந்திருக்கிறது. அதை நம்பலாமா, வேண்டாமா என்பதை நவம்பர் 7ம் தேதிதான் சொல்லமுடியும்.