’என் மேல லவ் இருந்தா என்னைப்பாத்து, என் கண்ணைப் பாத்து நேருக்கு நேரா சொல்லவேண்டியதுதான. அதை விட்டுட்டு ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் எனக்கு ஸ்வெட்டர் மாட்டி டார்ச்சர் பண்ணினா இனி இதுதான் என் பதில்’’ என்றபடி தன்னை ஆபாசமாக சித்தரித்து படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாடகி
சின்மயி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
சினிமாவில் பின்னணி பாடியும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியும் வரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள் பலர் அவரை நடிக்க அழைத்தபோது ‘நோ’ சொல்லி விட்டார். ‘காட் ஒன்லி சிங்கிங்க்குதான் என்னைப்படைச்சிருக்கார். நோ ஆக்டிங்’ என்று ஓவர் ஆக்டிங் ஒன்றைக்கொடுத்தபடியே தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார்.
முதல் புகாரில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சங்கீத மகா யுத்தம்’ நிகழ்ச்சியை கஜேந்திரசிங் தயாரித்து நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பணியாற்ற எனக்கு குறிப்பிட்ட பணம் தருவதாக ஒப்புக்கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து மாதம் பல சென்ற பிறகும் எனக்கு தரவேண்டிய ரூபாய் 12 லட்சம் தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி விட்டார்.எத்தனையோ முறை போராடியும் என்னை உதாசீனப்படுத்தினார்.கஜேந்திரசிங் எனக்கு தரவேண்டிய தொகையை காவல்துறை மீட்டுத்தர வேண்டி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மற்றொரு புகார் மனுவில்,”ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். என்னை தன் மாணவி போல் நினைக்கவேண்டிய உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் மற்றும் இணையதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் சின்மயிக்கு, அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, மீதி அத்தனை நாட்களும் அந்த ஏரியாக்களில், யாருடனாவது, ஏதாவது பஞ்சாயத்தோடே அலைந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சின்மயிக்கு லீவு கூட விடுறாய்ங்களா, இவிங்க ரொம்ப நல்லவங்களாயிருக்காங்களே?
.