ஒட்டுமொத்த இந்தியாவும் உச்சி முகர்ந்து பாராட்டி தீர்த்ததில், அடுத்த படத்தில் உடனே நடித்தாகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் இங்கி விங்கி ஸ்ரீதேவி.
‘’ என் மேல் இருக்கும் பாசத்திலும், பாவம் பதினாறு வருஷ கேப்புக்கு அப்புறமா வந்திருக்காளே
நாமளும் கொஞ்சம் பாராட்டி வைப்போம் என்று ஃபார்மாலிட்டியான பாராட்டுக்களை மட்டுமே நான் எதிர்பர்த்தேன். ஆனால் இத்தகைய வரவேற்பு என்னை நெகிழச்செய்து விட்டது,. அதனால் மறுபடியும் சிறு கேப் கூட விழுந்து விடாமல் படங்களில் நடிக்க முடிவு செய்துவிட்டேன்’’.
’மறுபடியும் ‘இங்கி விங்கி’ மாதிரியே குடும்ப்பாங்கான ரோல்கள் தானா?’
மறுபடியும் நான் குடும்ப்ப்பாங்கான வயதான ரோல்களில் நடிக்கவேண்டும். அப்படி நடிப்பதானால் கடந்த 16 ஆண்டுகளில் நான் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்க முடியுமே? என் நடிப்புக்கு தீனி போடுகிற, அதே சமயம் என் இளமையையும் எக்ஸ்போஸ் பண்ணமுடிகிற கதைகளில் நடிக்கவிரும்புகிறேன்.
மறுபடியும் கதைகேட்க ஆரம்பித்துவிட்டீர்களா?’
‘இங்கி விங்கி’ ரீலீஸான தினத்திலிருந்தே அநேகம் பேர் கதை கேட்கும்படி என்னை விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். நான் தான் இன்னும் கொஞ்சம் சகஜமான மனநிலைக்கு வந்த பிறகு கேட்போமே என்று தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்.
’உங்க கணவர் போணி கபூர் தயாரிப்பில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?’
இதுக்கு முந்தி என்ன நினைத்தாரோ தெரியாது.’இங்கி விங்கி’ பார்த்த நாள் முதலே என்னிடம் கால்ஷீட் கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கிறார்.’ யோவ் முதல்ல நல்ல கதையோட வாய்யா’ என்று அவரை நக்கலடித்துக்கொண்டிருக்கிறேன்.
‘மீண்டும் தமிழ் சினிமாப்பக்கம் வரும் திட்டம் இருக்கிறதா?’
குறிப்பாய் அப்படி எதுவும் இல்லை. ஒன்றிரண்டு இந்திப்படங்கள் பண்ணியபிறகே அதுபற்றி யோசிக்கமுடியும்.
‘அஜீத்தும், அமிதாப்பும் உங்களுக்காக ஒரு காட்சியில் வந்துபோனார்களே, அதே போல் அஜீத் படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடச்சொன்னால் ஆடுவீர்களா?
அதற்கு ஏன் ஐட்டம் பாடல் என்று நீங்கள் பெயர் வைக்கிறீர்கள். அஜீத், கேட்டுக்கொண்டால் என்ன, அவர் அப்படி மனதில் நினைப்பது தெரிந்தால் கூட ஆடிக்கொடுத்துவிட்டுப்போவேன்.
அட விஷ்ணுவர்த்தன் சார் திடீர்னு ஏன் மும்பைக்கு ஃப்ளைட் டிக்கட் போடுறீங்க?’