பட ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் எப்போதுமே ‘ஆனந்தவிகடனுக்கு’ நட்டுகழண்ட பேட்டி ஒன்று கொடுத்து ஸ்டில்களை அதில் முதல்முதலாக வெளியிடும் ஒரு கலாச்சாரத்தை’ சேது’ தொடங்கி ‘பரதேசி’ வரை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்கிறார் பாலா.

அவர்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவாக கொடுப்பதால், ஒரு மணி நேரம் வரை கொந்தளிப்பில் அலையும் மற்ற பத்திரிகையாளர்கள், அப்புறம் மெல்ல அமைதியாகி’ பரதேசி’ குறித்து பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.

நாளை விகடனில் வரும் ‘சினிமாவுக்கு வராம இருந்தா நான் செத்தே போயிருப்பேன்’ பேட்டி பாலாவின் வெற்றிகரமான 500-வது பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவை, இன்னும் இந்த கெட்-அப் என்னும் மொட்டப்பிலிருந்து பாலா ரிலீஸ் பண்ணாததால் வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாமல் தவிக்கிறார்.

பரதேசி’ ரிலீஸாகவிருக்கும் தீபாவளியன்று அதர்வா இப்போது இருக்கும் கெட்டப்புக்கு தான் பாலா மாறப்போகிறாராம். படம் தேசிய விருது வாங்கும் வரை பாலாவின் அந்த கெட்ட அப்பு தொடருமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.