மக்கள் மறந்துபோன தன் முகத்தை ‘திருத்தணி’யிலாவது பார்க்கட்டும் என்ற பரத்தின் கனவை, படத்துக்கு தடைகேட்டு கோர்ட்டுக்குப் போனதன் மூலம், தகர்த்து எறிந்துவிட்டார் நல்லி எலும்பு நாயகன் ராஜ்கிரண்.
இந்நிலையில் ‘பூ’ சசியின் மெகா இழுவையான ‘555’ படத்தில் பரத் சிக்ஸ் பேக் கெட்டப்பில்’ படத்தில் கண்டபடிதான், முழுப்படமும் வருகிறார் என்கிற செய்தி, டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டவர்கள் போல், பலரையும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டும் இன்னும் பாதிப்படத்தைக் கூட முடிக்காத சசி, இதுவரை பரத்தின் கெட்-அப், சில பாடல் காட்சிகள், சில சண்டைக்காட்சிகளை மட்டுமே முடித்துள்ளாராம்.
‘’சார் இப்பல்லாம் சிக்ஸ் பேக் ட்ரெண்ட் காலாவதியாகிப்போச்சி. சிக்ஸ் பேக்ல அலைஞ்ச சரத், சூர்யால்லாம் கூட இப்ப சிங்கிள் டீதான் சாப்பிடுறாங்க. படங்கள்ல மக்கள் கதைன்னு ஒண்ணு எதிர்பாக்குறாங்க’ என்று உதவி இயக்குனர்கள் ஞாபகப்படுத்தியதும், ‘’ஆமால்ல’’ என்றபடி ‘555’ க்கு இப்போதுதான் கதையே தேட ஆரம்பித்திருக்கிறாராம்.