யாரும் இப்படி தூக்கத்தில் உளறிவிடவில்லை. ஜப்பானிலிருந்து வரும் டோக்யோ டிவி தான் இப்படி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.
இந்தப் புகழ் பெற்ற டோக்யோ டி.வியின் ‘யாரி சுகி கோ ஜி’ – ‘யாருமில்ல ஜீ.. கோவிச்சுக்காதீங்க ஜீ’ என்று சொல்வது போல வரும் ஒரு
ஜப்பானிய தொடரில் இப்படி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வித்தியாசமான விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்களாம்.
அதன் சிறப்பு நிகழ்ச்சியில் வரும் நவம்பர் 2ஆம் தேதி உலகின் பல்வேறு நாடுகளின் அழகிகள் பற்றி கூறுகிறார்களாம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்ட நடத்தப்படும் இப்புரோக்ராமில் இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். சீனிவாசன் என்பவர் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை வைத்து இவரைத் தேர்வு செய்தார்களாம்.
மேலேயிருக்கும் அந்தப் பரிசு பெற்ற புகைப்படத்தை உற்றுப் பாருங்கள். கொடியிடையில் நிற்கும் நங்கையாய் நமீதா.
மானாட மயிலாடவில் வந்த நம்ம்மீதா இந்தப் படத்தை நாலு தடவை சேர்த்து ஒட்டிவைத்தது போலிருப்பார் போலிருக்கிறது.
இந்தப் படத்தை எத்தனை வருஷத்துக்கு முன்னாடி எடுத்தீங்க சீனிவாசன் சார் ?