‘மாஸ், டான். ஸ்டைல் ‘ என்று தெலுங்கில் இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டிய ராகவேந்திரா லாரன்ஸுக்கு நிரந்தரமாக குட் பை சொல்ல தெலுங்கு திரையுலம் முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபாஸை ஹீரோவாக வைத்து லாரன்ஸ் கடைசியாக இயக்கியிருந்த ‘ரிபெல்’ தயாரிப்பாளர்களுடன்
லாரன்ஸ் மேற்கொண்ட மோதல்போக்கே இவரது இம்மீடியட் பேக்.அப்புக்கு காரணம்.
’ரிபெல்’ படத்தை 22 கோடியில் முடித்து தருவதாக கூறி, 40 கோடிவரை செலவை இழுத்து வைத்த லாரன்ஸ், அதன் தமிழ் உரிமையையும் தனக்கே தரவேண்டும் என்று தயாரிப்பாளர்களுடன் சண்டை போட்டார்.
படம் ரிலீஸாகும் வரை சும்மா இருந்த தயாரிப்பாளர்கள், ரிசல்ட் சுமார் என்றவுடன் களத்தில் இறங்கி, லாரன்சுக்கு எதிராக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களுடன் லாரன்சின் பழைய பகையாளிகள் சிலரும் கூட்டுச்சேர்ந்துகொள்ள, ‘இனி லாரன்சுக்கு எந்த ஹீரோவும் கால்ஷீட் தரக்கூடாது’ என்ற கோஷ்டிகானம் கிளம்ப ஆரமித்துவிட்டது.
‘’ முதல் ஷெட்யூல் பாங்காக்கில் எடுக்கிறேன் என்று அங்கே 7 கோடிவரை செலவு வைத்தார். அங்கே ஷூட் பண்ணிய அத்தனை சீன்களுமே எடிட்டிங் ரூமின் குப்பைத்தொட்டிக்குத்தான் சென்றன. எங்கள் நிலைமையைப் பார்த்த பிறகும், இனியும் எந்த தயாரிப்பாளராவது, அவரை இயக்குனராகப்போட்டால், உங்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டுபோய் நிறுத்திவிடுவார்’ என்கிறார் ’ரிபெல்’ தயாரிப்பாளரான புல்லாராவ்.
ராகவாவுக்கு எதிரா ஃபுல்லா ராவா அடிச்சிட்டு பேசி அவரை காலி பண்ணனும்னு முடிவு எடுத்துட்டாரு போலருக்கு புல்லாராவ்.