சித்தார்த் - சின்ன குஷ்பூ

சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கலகலப்பு’ சுமாராகவே போன படம் என்றாலும் விளம்பரங்கள் மூலம் அதற்கு தரப்பட்ட பளபளப்பு, அதையும் கூட ஒரு மாபெரும் வெற்றிப்படம் போலவே மாற்றிவிட்டது.

அடுத்து விஷால், அஞ்சலியை வைத்து குஷாலாக அவர் இயக்கிவரும் ‘மத கஜ ராஜா’ வும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில்,இனி நோ ரெஸ்ட் என்ற முடிவில்,’தீயா வேலை செய்யனும் கொமாரு’ என்ற படத்தையும் சூடாக ஆரம்பிக்க இருக்கிறார்.

தயாரிப்பாளர் குஷ்ஷின் தயவில் நடிகர் சித்தார்த்தின் கால்ஷீட்டை அவரிடம் கதை சொல்லாமலே வாங்கிய சுந்தர்.சி,கூட தீயா வேலை செய்வதற்கு ஹன்ஷிகா இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஃபீலிங்க்ஸை குஷ் மேடத்திடம் வெளிப்படுத்தினாராம்.

கள்ளங்கபடமற்ற குஷ் மேடமோ ‘அதுக்கென்னங்க கமிட் பண்ணிட்டா போச்சி’ என்று ஹன்ஷிகா நம்பருக்கு போனைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டாராம்.

ஏற்கனவே இண்டஸ்ட்ரி வட்டாரங்களில் சும்மா ஒரு பேச்சுக்கு ஹன்ஷிகாவை சின்ன குஷ்பூ என்று அழைத்து வருகிறார்கள். அதை அமல்படுத்த விரும்பிவிட்டார் போலும் சுந்தர்.சி.

அப்ப அஞ்சலி மேட்டருக்கு அஞ்சலி செலுத்தியாச்சா பாஸ்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.