வாழாவெட்டியும், வெட்டியா வாழுறவனும், அறுபதாவது வயசுல கல்யாணம் கட்டிக்கிட்டு, ‘வந்து ஆரத்தி எடுங்க’ன்னு வாசல்ல வந்து நின்னா எப்பிடி இருக்கும்?’
உங்களுக்கும் எனக்கும் எப்படி இருக்குமோ, ஆனால் அப்படி ஒரு ஜோடிக்கு ஆரத்தி எடுத்துதான், அடுத்த சாந்தி முகூர்த்த, ஹனிமூன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் ஆர்.பி.சவுத்ரி.
‘சிந்துசமவெளி’ என்று ஒரு படம் எடுத்து, சிலபல மாதங்களாக சந்துபொந்துகளில் தலைமறைவாக திரிந்தாரே சாமி ஞாபகமிருக்கிறதா?’ அடுத்த படம் கிடைக்காமல், கொஞ்சகாலம் ஆந்திராப்பக்கம் வாய்ப்பு தேடி அலைந்தவர், அங்கும் பருப்பு வேகாமல், நேராய் சூப்பர்குட் அலுவலகம் சென்றார்.
‘சார் இப்ப வெட்டியா இருக்க, உங்க பையன் ஜித்தன் ரமேஷை வெற்றிகரமான ரமேஷா மாத்திக்காட்டுறேன்’’
இதுதான் திருவாளர் ’சந்துசமவெளி’சாமி சவுத்ரிக்கு சொன்ன ஒரு வரிக்கதை.
‘ஒரு கண்ணுல பன்னீர். இன்னொரு கண்ணுல கண்ணீரா?’ என்று ஜீவா, ஜித்தா குறித்து ஏற்கனவே வீட்டுக்கார அம்மாக்களின் டார்ச்சரில் துவண்டு போயிருந்த சவுத்ரிக்கு, சும்மா இருக்குறதுக்குப் பதில் இந்த ‘வாழாவெட்டி-வெட்டியா வாழுற கூட்டணி ஓரளவுக்கு ஓக்கே என்று படவே, ‘நல்ல கம்மி பட்ஜெட்டுல கும்மி அடிக்கனும்யா’ என்றபடி சம்மதித்துவிட்டாராம்.
இவங்க கல்யாணப் பத்திரிகை, உங்களுக்கு, சீக்கிரமே வந்து சேருமுங்கோ.
பின்[ற] குறிப்பு ; இந்தப்படத்துல தனக்கு ஜோடியா, இனியாவை எப்பிடியாவது கமிட் பண்ணித்தரச்சொல்லி சாமிகிட்ட தனியா கோரிக்கை வச்சிருக்காராம் ஜித்தப்பா ரமேஷ்.