arjun-lakshmi-rai-newmovie1

ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கும் புதிய படமொன்றை அவரது ராசியான இயக்குனரான கோடி. ராமகிருஷ்ணா இயக்குகிறார்.

ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை 9ம் தேதி வடபழனி ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஆர்.பி. சௌத்ரி க்ளாப்

அடித்து துவங்கி வைத்தார்.

பூஜைக்கு வந்த அர்ஜூன் நேற்றுத் தான் காலேஜ் முடித்து வந்த பையன் மாதிரி ‘கிண்’ணென்று நின்று கொண்டிருந்தார்.

இப்படத்தில் முதன்முதலாய் அர்ஜூனுக்கு ஜோடியாக நம் லட்சுமி ராய் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு இரண்டு வித்தியாசமான வேடங்களாம். ஒரு வேடத்தில் அமைதியான குடும்பப் பெண்ணாக நடிக்கும் லட்சுமிராய் இன்னொரு அலட்டலான இன்னொரு கேரக்டரில் வந்து ஆடியன்ஸை கதிகலங்கச் செய்ய இருக்கிறாராம்.

பூஜைக்கு ஒரு பச்சை நிறச் சேலை கட்டி கொண்டை போட்டு வந்திருந்த லட்சுமி ராய் அப்படியே வசந்த மாளிகையின் வாணி ஸ்ரீ போலவே தோற்றம் தந்தார்.

இரண்டு வேஷத்துல ஏதாவது ஒரு வேஷத்திலயாவது நீச்சல் ட்ரெஸ்ஸில் வந்துருவீங்கள்ல மேடம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.