மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு காலையில் சத்யம் தியேட்டரில் ‘பரதேசி’ படத்தின், இதுவரை வாங்கியிருப்பவர் யார் என்று தெரியாத, ஆடியோ ரிலீஸை முடித்துவிட்டு, மதியம் மட்டன் பிரியாணி சகிதமாய் நிருபர்களை சந்தித்தார் பாலா.
தயாரிப்பாளர்,ஹீரோ, ஹீரோயினையெல்லாம் ஆக்கியாச்சி, இனி நமக்கு எதுக்கு ‘பரதேசி’ கோலம் என்று நினைத்தாரோ என்னவோ, கழுத்தில் படப்பிடிப்பின் போது அணிந்திருந்த
பாசி,ஊசி, கமண்டலங்களை கழட்டிவைத்துவிட்டு, அரவிந்தசாமி போலவே டீஸண்டாக வந்திருந்தார்.
‘பரதேசி’க்கு அஞ்சலி செலுத்த வந்தமாதிரி கேள்வி எதுவும் கேக்காம நிருபர்கள் அமைதியா அப்பிடியே எந்திரிச்சிப்ப்போயிட்டா நல்லாருக்கும். கொஞ்சம் ட்ரை பண்ணுங்க’ என்று தனது மக்கள் தொடர்பாளர் திகில்முருகனிடம் பாலா ஒரு கோரிக்கை வைத்திருந்தாலும், அதையும் மீறி ஒன்றிரண்டு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன.
‘அவன் இவன்’ சம்பந்தமா வந்த சில கடுமையான விமர்சனங்களை எப்பிடி எடுத்துக்கிட்டீங்க?’ என்று ஒரு நிருபர் துவங்கியபோது, முக்கால் இஞ்சுக்கு தனது முகத்தை சுருக்கிக்கொண்ட பாலா,’ அதுல எல்லாப்பயலுகளும் எஸ்கேப்தான். நான் தப்பா ஒரு படம் எடுத்தேனே ஒழிய, தன்னளவுவுல ஒரு தப்பும் பண்ணாத படம் அது’ என்றார், அந்தப்படம் போலவே, அரைவேக்காட்டுத்தனமாக.
அடுத்த கேள்வி சரித்திரப்பிரசித்தம் வாய்ந்தது. ‘சார் ஹீரோக்களுக்கு ஓ,கே. ஆனா, இதுவரைக்கும் உங்க படங்கள்ல நடிச்ச ஹீரோயின்கள் ஒண்ணு கூட உருப்படியா தேறுனதா தெரியலையே?’’என்று ஒரு நிருபர் கேட்க, ‘அட நாதாரிகளா, இந்த மாதிரி நான்சென்ஸா எதாவது நாக்கைப் புடுங்குறமாதிரி கேப்பீங்கன்னுதான, நான் கிரீன் பார்க்கைவிட்டு, கீழ இறங்கியே வர்றதில்லை’ என்று மைண்ட் வாய்ஸில் அழுதவர், ‘’ அது முந்தி,அப்பிடி நடந்தது. பாவம் அவளுகள்லாம் வீணாப்போயிட்டாளுக.இனிமே நடிக்கிறவளுக தப்பிச்சிருவாளுகன்னு நினைக்கிறேன். அதுபோக, கல்யாணத்துக்கு முந்தி,நான் ஒரு மிருகம் மாதிரி நடந்துக்கிட்டு ஹீரோயின்ஸ் கேரக்டரை கிரியேட் பண்ணேன். இப்ப எனக்கு ஒரு பொம்பளைப் பிள்ளைன்னு ஆனவுடா,மனுசனா மாறி,ஹீரோயின்களை நல்லபடியா உருவாக்க ஆரம்பிச்சிட்டேன்’ என்றார்.
இப்படி சில கேள்விகளுடன் சுமுகமாக பிரஸ்மீட் முடிந்து, ‘ஆத்தாடி,அம்மாடி, தப்பிச்சோண்டா’ என்று பாலா கிளம்பிப்போகையில்,’ சார் ‘பரதேசி’ பயங்கர டாகு’மெண்டல்’ படமா வந்திருக்கதாகவும், அதனாலதான் இதுவரைக்கும் ஆடியோ கூட விக்கலைன்னும் ஒரு நியூஸ் கேள்விப்பட்டோமே?’ என்று ஒரு நிருபர் கூட்டத்தோடு கூட்டமாய் கேள்வி கேட்க,மீண்டும் மிருகமாய் மாறி, பாலா அந்த நிருபரை நோக்கித்திரும்ப,அவர் கூட்டத்தோடு கூட்டமாய் எஸ்கேப் ஆகியிருந்தார்.
ஒண்ணு எடுத்தா மெண்டல் படம், இல்லைன்னா டாகுமெண்டல் படம்,.. இதெல்லாம் பாலாவுக்கு ஜகஜமப்பா.