jyothika-isback-3Nov12

வாலி படத்தில் முதன் முதலில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து அடுத்த பத்து வருடங்களில் சுமார் 40 படங்கள் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ஜோதிகா தான் மீண்டும் நடிக்க வருகிறார்.

தன்னுடன் முதல் படத்தில் பூவெல்லாம் கேட்டுப்பாரில் ஜோடியாக நடித்த சூர்யாவுடன் காதலில் விழுந்த ஜோதிகா

பின்பு புகழின் உச்சியிலிருந்த போதே அவரைத் திருமணம் செய்துகொண்டு இனிமேல் நடிப்பதில்லை என்று சொல்லி திரையுலகிலிருந்து குடும்ப உலகிற்குள் சென்று விட்டார்.

அவருடைய நடிப்பு ஆரம்ப காலங்களில் ஒரு சாதாரண ஹீரோயினின் அளவுக்கே இருந்தாலும் தொடர்ந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு காக்க காக்க, சந்திரமுகி, மொழி போன்ற படங்களில் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.

மொழியில் வாய் பேசமுடியாத ஊமையாக அவர் நடித்த நடிப்பும், சந்திரமுகியின் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி சந்திரமுகியாக நடித்ததும் ஒரு நல்ல நடிகையை தமிழ் திரையுலகம் மிஸ் பண்ணிவிட்டதே என்று எண்ணும்படி செய்துவிட்டன.

இப்போது ஜோ-சூர்யாவின் குழந்தையும் வளர்ந்து ஸ்கூலுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டதால் வீட்டில் போரடிக்க ஆரம்பித்துவிட மீண்டும் நடிக்கலாமா என்று யோசித்து சூர்யாவை கேட்க அவரும் சரியென்று தலையாட்டி விட்டாராம்.

ரொம்ப செலக்டிவ்வாக படங்களில் நடிக்க ஜோதிகா ரெடி. ஆனால் கண்டிப்பான மாமனார் சிவக்குமாரோ அதான் நடிப்பு வேண்டாம்னு வந்தாச்சே பின்னே திரும்பவும் நடிக்கனுமா? நல்லா யோசனை பண்ணுப்பா..என்று கொஞ்சம் யோசிக்கச் சொல்லியிருக்கிறராம்.

வாங்க சந்திரமுகி மேடம்.. வந்து மீண்டும் கலக்குங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.