கும்கி படம் ஆடியோ ரிலீஸாகி படத்தின் வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்றார்கள். ஆடியோ பாடல்கள் வேறு நன்றாக இருந்ததா படம் ஹிட்டாகி விடும் என்று பெரும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
இடையில் ரெடியான படத்தைப் போட்டுப் பார்த்த லிங்கு சாமி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யானை சம்பந்தப்பட்ட காட்சிகள் ராமநாராயணன் ரேஞ்ச்சுக்கு வந்திருப்பதால் கடும் டென்ஷனாகிப் போனாராம்.
யானை துரத்தும் காட்சி, சண்டை போடும் காட்சிகள் எல்லாம் எதிர்பார்த்த அளவு த்ரில்லாக வராததால் அப்செட்டாகிப் போன லிங்கு அந்தப் பகுதிகளை சரிசெய்துவிட்டுத் தான் ரிலீஸ் என்றுவிட்டாராம்.
சரி. திரும்பவும் யானையைக் கூப்பிட்டுப் போய் அந்தக் காட்சிகளை எடுக்கலாம் என்றால் கட்டுப்படியாகாது என்பதால் கிராபிக்ஸ் பயன்படுத்தி அந்தக் காட்சிகளை சரிசெய்யலாம் என்று யோசிக்கிறார்களாம்.
கிராபிக்ஸ் வேலைகளென்றால் இன்னும் இரண்டு மாசமாவது இழுக்குமே. ‘அப்படியானால் கும்கி தீபாவளிக்கு ரிலீஸாகாதா?’ என்று டென்ஷனில் இருப்பவர் கதையின் நாயகன் விக்ரம் பிரபு தான்.
நமக்கென்ன சார்..துப்பாக்கி, கடல்ன்னு ஏதையாவது தீபாவளிக்குப் பார்ப்போம்.