‘மாற்றான்’ ரிலீஸுக்கு முன்பு, ‘அடுத்த படம் நீங்க என்னை வச்சி டைரக்ட் பண்ணலைன்னா உங்க வீட்டு வாசல்ல தர்ணா இருப்பேன்’ என்று ரஜினி கூட அவரிடம் கெஞ்சிக்கூத்தாடினார்’ எனறு சொல்லப்பட்ட கே.வி. ஆனந்தின் இப்போதைய நிலைமை கேட்டால் காடே கண்ணீர்விட்டு அழுகும்.
ரஜினி இல்லையென்று ஆனவுடன், சூர்யாவை, ஆனந்த் அணுக முயற்சித்தபோதெல்லாம், ‘எதிர்முனையிலுள்ள நபர், உங்கள் மேல் கடும் எரிச்சலில் உள்ளார் என்றே பதில் வந்ததாம்.
அதையடுத்து, மார்க்கெட் வரிசைக் கிரமமாக அஜீத், விஜயில் துவங்கி, அத்தனை நட்சத்திரங்களையும் அண்டி அவமானப்பட்ட நிலையில், இனி நான் யாரிடமும் கதை சொல்ல அலைந்ததாக தயவுசெய்து எழுதாதீர்கள். கண்ட கண்ட ….கள்லாம் நடிக்கும்போது நானே ஏன் ஹீரோவாகக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்’ என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார் ஆனந்த்.
அப்படியே ஹீரோயின் யார்னு மட்டும் சொல்லிருங்க. உங்க ரெண்டுபேரையும் கொஞ்ச நாளைக்கு கொஞ்சனும் போல இருக்கு.