ரஜினி இன்னும் ஒரு படமோ, அல்லது ஒன்றிரண்டு படங்களோ நடித்துவிட்டு ஓய்வெடுக்கப்போகிறார். கமலோ ஒரு கலைஞானி, இறுதிவரை மேக்கப் போட்டுக்கொண்டே இருக்க விரும்புபவர்.
ஆனால் இவர்கள் இருவர் மீதும் என்ன கோபமோ தெரியவில்லை. இருவரையும் ஒரே கல்லில் அடித்து வீழ்த்தத் துடிக்கிறார் சர்வதேச இயக்குனர் கஞ்சன்பச்சான்.
‘இந்த சமூகத்தை ஏமாத்தி கமலும் ரஜினியும் எவ்வளவோ கோடிகள் சம்பாதிச்சாங்களே ஒழிய, பதிலுக்கு அவங்க இந்த சமூகத்துக்கு எதுவுமே செய்யலை. ரெண்டுபேரையும் எனக்கு மட்டும் ஒரு அம்பது நாள் கால்ஷீட் தரச்சொலுங்க. அவங்கள வச்சி பயங்கரமான மெசேஜ் சொல்லி, இந்த சமூகத்தையே புரட்டிப்போடுறேன்’ என்று நேற்று இரவு சன்.டி.வியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் நெஞ்சில் பயமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி அறிவித்தார் டங்கர்.
நேற்று இரவு சன் டி.வி.யில் விவாத மேடை’ என்ற நிகழ்ச்சி இரவு 10.30 க்கு நடைபெற்றது. மொட்டைபாஸ் ‘பாஸ்கி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, விநியோகஸ்தர் ‘பஞ்சாயத்து’ராஜனும், கே.ஆரும், டவுசர் பச்சானும் கலந்துகொண்டனர்.
கடந்த தீபாவளிக்கு ரிலீஸான தங்கரின் ‘அம்மாவின் கைப்பேசி’யின் வசூல், டங்கரது செல்போனுக்கு ரீ-சார்ஜோ, டாப்-அப்போ பண்ணக்கூட, பயன்படாத அளவுக்கு மட்டமாக இருப்பதால் மனசு உடைந்துபோன தங்கர், சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் தமிழக ஜனங்கள் மீது மண்ணை வாரி இறைத்துக்கொண்டு வருவதாகத்தெரிகிறது.
நேற்றைய விவாதத்திலும்,’ தயவுசெய்து என்னொட ‘அம்மாவின் கைப்பேசி’யை தமிழ்ப்படங்களோட ஒப்பிட்டு என்னக்கேவலப்படுத்தீடாதீங்க’ என்று கேட்டுக்கொண்ட தங்கர், கையில் நாலைந்து பலாப்பழங்களுடன் ஃபாரீன் குடியேறி அங்கு யூரின் ..ச்சீ ஸாரி, அங்கு இனி ஒன்லி இங்கிலீஷ் படங்கள் மட்டுமே எடுக்கப்போகிறாராம்.
‘மொத்தத் தமிழ்நாடும் தேடி வந்து என்னைக் கையெடுத்து கும்பிட்டு கூப்பிட்டாலும், இனிமே தமிழ்நாட்டுக்காரனுக்கு படம் எடுக்கமாட்டான்’ங்க இந்த தங்கர்பச்சான்’ என்று மார்தட்டுகிறார்’ ஓல்டு மாங்க்’ மச்சான்.
‘இத இத இதத்தான ரொம்ப நாளா எதிர்பார்த்துக்கிட்டு இருந்தீங்க. போங்க போய் புள்ளகுட்டிகளோட நிம்மதியா குடும்பம் நடத்துங்க’.