சமீபத்தில் நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் முஸ்லீம் அமைப்புகள் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமெரிக்க அரசு கொடுத்த கடுமையான நெருக்கடியில் போலீஸ் தடியடி, கண்ணீர் புகை வீச்சு என்று களேபரமானதில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் ஒரு மாசத்துக்கு போலீசார் கால்கடுக்க வெயிலில் நின்று கொண்டிருந்தார்கள்.
தற்போது ‘துப்பாக்கி’ படத்திலும் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றிருந்தது. சுமார் 20 இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து இதை எதிர்த்து போராட ஆரம்பித்தவுடன் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்த டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ், தாணு, எஸ் ஏ சந்திரசேகரன், ஆகியோர் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவும் ஒப்புக் கொண்டனர்.
அப்போது பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன் “என் மகன் விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. சாதி, மத வேறுபாடுகளே அவனுக்குள் இருந்தது இல்லை.
இந்தப் படத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக தெரியாமல் இடம்பெற்ற சில காட்சிகளுக்காக வருந்துகிறோம். இதற்கு பிராயச்சித்தமாக என் மகன் ஒரு படத்தில் முஸ்லீம் கேரக்டரில் ஒரு முழுப்படத்திலும் நடிப்பார்,” என்று கூறினாராம்.
தமிழர்களின் பாரம்பரிய மத நல்லிணக்க உணர்வை உடனே வெளிப்படுத்தினதுக்கு நன்றி விஜய் பாய்.