டெல்லியில் 23 வயது இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக சில மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்ட இயக்குனர் அமீர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நடுரோட்டில் நிற்க வைத்து மரண தண்டனை வழங்குவது மட்டுமின்றி, அதை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படி ஷூட் பண்ணி வெளியிடவேண்டும்
என்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
அமீர் அத்தோடு நின்றிருந்தால் அது ஒரு பொறுப்புள்ள இயக்குனரின் சமூக அக்கறை என்கிற அளவில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் அதற்கும் ஒருபடி மேலே போன அமீர், நேற்று தூத்துக்குடியில் ஒரு இளம் சிறுமி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு தூக்கு தண்டனை வழங்கி, கற்பழிப்பு வழக்கில் எப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பாடம் புகட்டும்படி கேட்டுக்கொண்டார்.
இதைப்படித்து கடுப்பான தலமறைவு தயாநிதி அழகிரி தனது ட்விட்டரில் சில நிமிடங்களுக்கு முன்னர் ‘ டெல்லி கற்பழிப்பு வழக்கு குறித்து கமெண்ட் அடிக்கும் பலரும் தனக்கு விளம்பர வெறியர்களாகவே படுவதாக, அமீரை நேரடியாக தாக்கி ஒரு ட்விட் வெளியிட்டார். சற்றுமுந்தைய நிலவரத்தின்படி, தயாநிதிக்கு எதிரான அடுத்த அறிக்கையை அமீர் தயாரித்துக்கொண்டிருப்பதாக தகவல்.