2013 எங்கே தனக்கு துன்பமான வருடமாக துவங்கிவிடுமோ என்று துவண்டு காணப்படுகிறார், இசையமைப்பாளரும், மிகவிரைவில் புதுமாப்பிள்ளை ஆகப்போகிறவருமான ஜீ.வி பிரகாஷ்.
அவர் மிகவும் எதிர்பார்த்த பாலாவின் ‘பரதேசி’ ஆடியோ விற்பனையில் பெரிய அளவில் ஊத்திக்கொள்ள, அடுத்து அவரை அதிக அளவு
அப்செட்டுக்கு ஆளாக்கியிருப்பவர், அவரது வருங்கால மனைவியும் பாடகியுமான சைந்தவி.
ஏ.ஆர். முருகதாஸ் நிறுவனத்தில் கதை-விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே, அப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜீ.வி.பிரகாஷ் அணுகப்படுவார் என்று நாம் நான்கு மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்ததுபோலவே, ஹீரோவாக கமிட் பண்ணப்பட்டு, கதையும் கேட்டுமுடித்து ஓ.கே.சொல்லியிருக்கிறார்.
ஆரம்பத்தில் அரைகுறை மனதோடு பிரகாஷின் இந்த அவதார ஆட்டத்துக்கு ஒத்துக்கொண்ட சைந்தவி, சமீப சில தினங்களாக, ரெட் சிக்னல் காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
‘ ஏற்கனவே பாடகிகள் சிலரே ஒன்ன வச்ச கண்ணு வாங்காம பாக்குறதைப் பாத்து நான் வேர்த்து விறுவிறுத்திருக்கேன். அடுத்து நடிக்கப்போய் சமந்தா, த்ரிஷாக்கள் கிட்ட இருந்து ஒன்ன சமத்தா காப்பாத்துறது எப்படி?’ என்று கவலைக்குறிகளுடன் கேள்விக்குறிகள் எழுப்புகிறாராம் சைந்தவி.
’என்னடா இது 2013 ஓப்பனிங்கே ஒர்ஸ்டா இருக்கே?’ என்று ஒலகம் வெறுத்துப்போய் நெக்ஸ்ட் ரெஸ்ட்டு மூடில் இருக்கிறார் ஜீ.வி.பரிகாஷ்.