மணிரத்னம் முன்பெல்லாம் படத்துக்குப் படம் வித்தியாசமான கதை, வி்த்தியாசமான கேமரா, அப்பப்போ ஊறுகாய் போல தீப்பற்றி எரியும் பிரச்சனையான விஷயங்கள் என்று படத்தின் மீதான ஆடியன்ஸின் எதிர்பார்ப்புக்கு குறை வைக்காமல் செய்து விடுவார்.
இப்போதும் அந்த மாதிரி தான் கடல் என்று பெயர் வைத்ததன் மூலம் மீனவர் மற்றும் இலங்கைப் பிரச்சனையைப் பேசப் போகிறேன் என்பது போல தோற்றம் வருகிறது.
ஆனால் இந்தக் காலத்தில் இது மட்டும் பத்தாதே. எனவே கடல் பர்ஸ்ட் லுக், திரும்பவும் கடல் பர்ஸ்ட் லுக், இன்னொருவாட்டி கடல் பர்ஸ்ட் லுக் என்று ஹீரோ ஹீரோயினின் புகைப்படங்களை செவ்வாய் கிரகத்தை க்யூரியாசிட்டி ரோபாட் செவ்வாயிலிருந்து எடுத்த போட்டோக்களை வெளியிடும் நாசா விஞ்ஞானி போல் எடுத்து ஒவ்வொன்றாக வெளியிடுகிறார்.
இதில் இன்னும் ஹீரோயின் துளிசியின் கடல் பட போட்டோ வெளிவரவில்லை. க்யூரியாசிட்டி விண்கலம் நாளை எடுத்துத் தரும் என்று நம்பப் படுகிறது.
சரி. கடல் பற்றிப் பேசுறார். படத்தில் ஏதாவது துணிச்சலான கருத்துக்களைச் சொல்வாரா ? படத்தின் பர்ஸ்ட் லுக் பாத்தாத்தான் தெரியும்.