சனியன்று ஹயாத்ஹோட்டலில் நடந்த,’விஸ்வரூபம்’ டி.டி.ஹெச் முழக்க’ பத்திரிகையாளர் சந்திப்பின் ஹீரோ, வில்லன், காமெடியன் என அத்தனை ரோல்கலையும் கைப்பற்றிவர் என்னவோ இயக்குனர் இமயம் பாரதிராஜாதான்.
வழக்கத்தை விட கொஞ்சம் ஓவர் ‘சுதி’யில் இருந்த
பாரதிராஜா, அன்று மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் ‘ வாட் ஐ திங்க் இஸ், அதாவது நான் என்ன நினைக்கிறேன்னா,..’ என்று தங்கிலீஷில் அநியாயத்துக்கு பொழந்து கட்டினார்.
விழாமேடையில் கமலின் டி.டி.ஹெச் பார்ட்னரர்களாக சில தமிழரல்லாதவர்கள் வீற்றிருந்தாலும், வழக்கம்போல், ‘என் இனிய தமிழ் மக்களே,..’ என்றே தன் பேச்சை துவங்கிய பாரதிராசா, கமலை அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்பட்டு தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடினார்.
‘ சிவாஜி கணேசன், இளையராஜா, கமல்ஹாஸன் இந்த மூனுபேரும் தமிழ்சினிமாவுக்கு கிடைச்ச பொக்கிஷங்கள். இவங்கள என்னகாரணத்துக்காக யார் அவமானப்படுத்தினாலும் ஒவ்வொரு தமிழனும் பொங்கி எழனும்’ என்ற பாரதிராஜா தன்பேச்சு நெடுக அவர்கள் மூவரையும் தொடர்ந்து வியந்து, ரெண்டுபெக் ஜாஸ்தி போட்டாலும் தமிழன் தமிழன் தான் என்பதை நிரூபித்தார்.
என்மேல உள்ள அபரிமிதமான அன்பால கமல் எனக்கு மட்டும் தனியா ‘விஸ்வரூபம்’ படத்தைப் போட்டுக்காட்டினார். எமோஷன்ஸும்,ஏஸ்தெடிக்ஸும், அதாவது உணர்ச்சிவசப்படவும், அழகை ஆராதிக்கவும் மட்டுமே எனக்குத்தெரியும். ஆனா தொழில்நுட்பத்துல கமல் என்னை தூக்கி சாப்பிட்டுட்டு எங்கேயோ போயிட்டார். ‘விஸ்வரூபம்’ தொழில்நுட்பத்துல ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படவேண்டியபடம். அதுல ஒரு காட்சியில வந்து,…’ என்று பாரதிராஜா சொல்லப்போக கமல் கையெடுத்துக்கும்பிட்டு சொல்லவேண்டாமென்று தடுத்தார்.
அடுத்து பேச்சுப்பயணம் பட நாயகிகள் பூஜா குமார் மற்றும் ஆண்டிரியாவை நோக்கி நகர, என்னதான் வயதானாலும், பாரதிராஜாவின் ‘அழிச்சாட்டியம் ஓய்வதில்லை’ என்று நினைத்துக்கொண்டு கமல் உட்பட அனைவரும் ரசிக்க ஆரம்பித்தார்கள்.