’திருவிளையாடல்’ படத்தை மறுபடியும் ‘கர்ணன்’ போல் டிஜிடலைஸ் பண்ணி வெளியிடுவதாக இருந்தால், தயவு செய்து தருமியின் கேள்வி பதில் பகுதியில், ‘பிரிக்க முடியாதது?’ குஷ்புவும், காண்ட்ரவர்ஸியும்’ என்பதை மறக்காமல் சேருங்கள்.
இடையில் எதிர்பாராமல் கிடைத்த சின்ன ரெஸ்டுக்கு அப்புறம், சரக்குக்கு ஷைடிஷ் கிடைக்காமல் அலைந்த இந்து மக்கள் முன்னணி கட்சியினர் கையில் வசமாக மாட்டியிருக்கிறார் நம்ம குஷ்.
பிரச்சினை அவர் சேலை கட்டியிருந்ததுதான்.
‘யோவ், மாடர்ன் போட்டாலும் பிரச்சினை பண்றீங்க, சேலை கட்டினாலும் பிரச்சினை பண்றீங்க,. அவங்க வேற என்னதான்யா பண்றது?’
‘சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட குஷ்பூ,தான் கட்டியிருந்த ‘டிஸைனர்’ சேலையில் பல இடங்களில் ‘பிரம்மச்சாரி அனுமன் உட்பட சில இந்துக்கடவுள்களை நடமாட விட்டிருந்தார்.
அத்தோடு விட்டிருந்தால், அதை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அதை நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் தனது ட்விட்டரில் குஷூ பெருமையடிக்க, செய்தி பரவி, நாகர்கோவில் இந்து மக்கள் கட்சியினர் வரை போய்விட்டது.
அனுமன் போன்ற ஒரு பிரம்மச்சாரியை தனது சாரியில் நடமாட விட்டு ‘ஸாரி’ பண்ணினால் நம்ம இந்துத்வா மக்கள் விடுவார்களா?’ ‘கட்டாதே கட்டாதே சேலையே கட்டாதே’ என்று குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துவிட்டார்கள்.
ஆனால் குஷ்புவோ வழக்கத்தைவிட காரமாக, ‘ அவனுக வேலைவெட்டி இல்லாத பயபுள்ளைக. நான் இந்தவாட்டி அவனுகள கண்டுக்கிறதா இல்லை.என் சேலை. என் இஷ்டம்’என்று முழங்குகிறார்.
மேடம் ஒரே ஒருவாட்டி, இப்பிடி போராட்டத்துல ஈடுபடுற பயபுள்ளக போட்டோக்கள் கொண்ட ‘டிஸைனர் சாரியோட ‘ஸாரி’ சொன்னா எல்லாமேட்டரும் சிம்பிளா தீர்ந்துரும்னு எங்களுக்குத்தோணுது.