ரிலீஸான முதல்காட்சியில், மூனாவது ரீல் ஓடுவதற்குள்ளாகவே, ஊத்திமூடப்பட்ட ‘பூ’ படத்தின் நாயகி பார்வதியை பலபேர் ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை.
அவ்வாறு மிஸ் பண்ணியவர்கள், அதே படம் சின்னத்திரைகளில் சில காட்சிகள் ஓடியபோது, பார்வதியின் அட்டகாச நடிப்பைப் பார்த்து ரசித்து
பரவசப்பட்டனர். ஆனால் அடுத்து பார்வதி என்ன ஆனார்?
படம் பாடாவதி என்கிறபோது பார்வதியாவது ஊர்வசியாவது என்கிறீர்களா? அதுதான் இல்லை. ‘’ என்னைத்தேடி மற்ற எந்த நடிகைகளையும் விட அதிக படங்கள் வந்தன. ஆனால் அதில் பெரும்பாலான கதைகள் குப்பைகள். அத்தனையையும் சற்றும் யோசனையின்றி நிராகரித்தேன்.
நான் ‘பூ’ வில் அறிமுகமான இந்த ஆறு வருடங்களில் தற்போது தனுஷுடன் நடித்து வரும் ‘மறியான்’ [ எந்த ‘ரி’ன்னு யாராவது சொல்லுங்கப்பா], ராதிகா சரத்குமார் கோஷ்டிகளின் ‘சென்னையில் ஒரு நாள்’ உட்பட மொத்தம் பத்தே படங்களில் நடித்திருக்கிறேன்.
தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைக்கு நியாயம் கற்பிக்கவேண்டும் என்று ஒரு நடிகை நினைத்தால், அவர் வருடத்துக்கு இரண்டு படங்களுக்கு மேல் நடிக்கக்கூடாது என்பது எனது கருத்து’ என்கிறார் பார்வதி.
‘மறியான்’ படத்துக்கு பார்வதியை ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்தவர் , அதன் நாயகன் தனுஷ்தானாம். சுமார் ஒரு வாரம் அவரிடம் விடாமல் முரண்டு பிடித்து வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாராம் இயக்குனர் பரத்பாலா.
அட பாலாவுக்கே ஹீரோயின் சிபாரிசா?