‘எதிர்பாராத விபத்தாக நானும் காதலில் விழுந்துவிட்டேன். அதனால், இதுகாறும், ஒருதலையாய்க் காதலித்து வந்த ரசிகர்கள் என்னை மறந்துவிட்டு சகஜநிலைக்குத் திரும்பவேண்டும்’ என்று ரசிகர்களின் ஹார்ட்டில் ஓட்டைபோட்டுவிட்டு, சற்றும் மனசாட்சியின்றி பேச ஆரம்பித்திருக்கிறார் பொன்வசந்தி
சமந்தா.
அவர் தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்துவரும் படம் ‘ஆட்டோநகர் சூர்யா’ அப்படம் தொடர்பான ஒரு குட்டி பத்திரிகையாளர் சந்திப்பின்போது இப்படி ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார் சமந்தா.
‘நான் கடந்த பல மாதங்களாகவே படப்பிடிப்பின் பிஸியில் காதலிக்க நேரமில்லாமல்தான் இருந்தேன். திருமணமான சில நடிகர், டைரக்டர்கள் உட்பட எவ்வளவோ பேர் என்னிடம் புரபோஸ் செய்தார்கள். அப்போதெல்லாம் எனக்கு லவ் மூடே இல்லை. கடந்தவாரம் ரிலீஸான ‘ஏதோ வெளிப்போயிந்தி மனசு’ ரிலீஸுக்கு அப்புறம் தற்செயலாக சந்திக்க நேர்ந்த ‘விஷேசமான’ ஒருவரை நான் மிகவும் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரும் அதே அளவு என்னைக் காதலிக்கிறார் என்பதை கண்மூடித்தனமாக நம்புகிறேன். அவர் பெயரை இப்போதைக்கு நான் வெளியே சொல்ல முடியாது.
இந்தக்காதலால் தற்போது நடித்து வரும் படங்கள் எந்தப்பாதிப்புக்கும் ஆளாகம் பார்த்துக்கொள்ளமட்டுமே என்னால் முடியும். இனி ஒப்புக்கொள்ளப்போகும் புதிய படங்கள் குறித்து எதுவும் கூற முடியாது’ என்ற சமந்தா, ’’எனது இந்த காதல் முடிவால் மற்ற எல்லோரையும் விட அதிக சந்தோஷப்படப்போகிறவர் இயக்குனர் கவுதம் தான். ஏனெனில் இதற்கு முன் அவரோடு இணைத்துதான் அதிக கிசுகிசுக்கள் வந்திருக்கின்றன’’ என்றார்.
இந்த திடீர் தகவலைக் கேட்டு மனம் வெதும்பிப்போன நிருபர்கள், அவரது காதலர் யார் என்பது குறித்து சின்னதாகவாவது ஒரு க்ளூ தரச்சொல்லி எவ்வளவோ கெஞ்சியும் அவர் அசைந்துகொடுத்தபாடில்லை.
‘அண்ணிதான் நீங்க யாருன்னு வெளிய சொல்ல வெக்கப்படுறாங்க. நீங்களாவது தானா வெளியவந்து, கொஞ்சம் எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கோங்கண்ணா’