’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ பழமொழியோடு இனி, ’ஆண்ட்டி மிரண்டால் வீடுகொள்ளாது’ என்ற புதுமொழியையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான் போல. ஏனென்றால் அப்படி ஒரு ஆண்ட்டியை வீட்டில் வைத்துக்கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக படாதபாடு பட்டுவருகிறார் அதிலோக சுந்தரி ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.
‘அ.சு. ஸ்ரீதேவி 16 ஆண்டுகளுக்குப்பின் நடித்து வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ சிறப்பாகப் போனதில் ‘என்னை யாருன்னு நெனச்சே?’ என்பது மாதிரியே போனியை டீல் பண்ணுகிறாராம் ஆண்ட்டி.
இதுவரை, தனது கம்பெனி தயாரிக்கத்தயார் என்று போனி, தன் மனைவிக்கு ஆறுக்கும் மேற்பட்ட கதைகள் அம்மணியிடம் போணியாகவில்லை.
இன்னொரு பக்கம் ‘இ.வி’ குடும்பத்தினர் பால்கியும் அவரது மனைவி கவுரியும் ஸ்ரீதேவியை திரும்பவும் ரிப்பீட் பண்ண விரும்பி, அமிதாப் பச்சன் தொடங்கி, அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக வரை வரிசையாக கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் எதிலும் திருப்தி அடையாத ஸ்ரீதேவி, சுமார் 36 நிபந்தனைகளுடன்தான் எப்போதுமே கதைகேட்க அமர்கிறாராம்.
அதில் ஒரு மூன்று நிபந்தனைகளை மட்டுமே உங்களுக்குத் தருகிறோம். அப்படி ஒரு கதை இருந்தா மும்பைக்கு ஃப்ளைட் புடிச்சி பாந்த்ரா போயி, நம்ம ஆந்த்ரா ஆண்ட்டிக்கு கதைய சொல்லிட்டு வாங்க’
நிப;1: நெசத்தில் 50 ஐ நெருங்கினாலும் கதைப்படி ஸ்ரீதேவிக்கு 30 வயதைத் தாண்டக்கூடாது.
நிப;2: கல்லூரியில் படிக்கும் மாணவன் ஸ்ரீயைக் காதலிப்பதுபோல் இருந்தால் நல்லது.
நிப;3:கரீனா கபூர், சோனாக்ஷி சின்ஹா போன்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு கதையில் கிளாமர் தூக்கலாக இருக்கவேண்டும்.