சினிமாவில், அதுவும் தமிழ்சினிமாவில், கதாநாயகியாக 11 ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதென்பது சாதாரண சாமர்த்தியம் கிடையாது.
இந்த சாதனையை இதற்கு முன்பு குஷ்பு போன்ற ‘கும்கி’ நடிகைகளே செய்ய முடிந்தது. ஆனால் அனைவரும் மூக்கில் விரல்வைக்கும்
வகையில், ரஜினி தவிர்த்து அனைவருடனும் டூயட் பாடி அசத்திவிட்ட ஒல்லிப்பிச்சான் த்ரிஷாவுக்கும்கூட, அது சர்வசாதாரணமாக வாய்த்துவிட்டது.
தற்போது தமிழில் விஷாலுடன் ‘சமர்’ படத்தில் நடித்துமுடித்து, ஜீவாவுடன் ‘என்றென்றும் புன்னகை’ படத்துடன் தனது அனைத்து ரவுண்டுகளையும் முடித்துவிட்ட த்ரிஷா, இனியும் ஹீரோயினாக மரத்தைச் சுற்றி ஆடி ஓடிக்கொண்டிருக்கமுடியாது என்று முடிவு செய்து,’ ரம்’ [RUM] என்ற ஆக்ஷன் அதிரடிப் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
ரம்பா, ஊர்வசி, மேனகா என்ற மூன்று பெண்களை மிக்ஸ் பண்ணி நடைபெறவிருக்கும் இந்த ஆக்ஷன் படத்தில் த்ரிஷாவின் இரண்டு தோழிகளாக பூர்ணாவும், அர்ச்சனாவும் நடிக்கவிருக்கிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜு இயக்கவிருக்கும் ‘ரம்’முக்கு ஆக்ஷனை மிக்ஸ் பண்ணவிருப்பவர் ‘பெப்ஸி’ விஜயன்.
‘ரம்’ படத்தின் கதையைக் கேட்டதுமே பிடித்துப்போனது. படத்தில் அதிரடியான ஐந்தாறு சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அதற்கென தனியாக பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஐடியா எனக்குக் கிடையாது. ஹீரோக்களுடன் டூயட் பாடுவதை விட ஃபைட் பண்ணுவது சுலபமான வேலையாக இருக்கும் என்றே கருதுகிறேன்’’ என்கிறார் த்ரிஷா.
‘டூயட்’டுன்னா உங்க அகராதியில வேற ஏதாவது அர்த்தம் இருக்குதா அம்மணி?’