vidya-balan-marries-siddarthroy-utv-ceo

மறைந்த நடிகை சில்க் ஸ்மீதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட டர்ட்டி பிக்ஸர் படத்தில் சில்க் ஸ்மீதாவின் பாத்திரத்தை ஏற்று நடித்து கலக்கிய நடிகை வித்யா பாலனுக்குத் தான் திருமணம்.

கேரளாவில் பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன் தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி, பெங்காலி போன்ற பல இந்திய மொழிகள் தெரிந்தவர். இவர் ஆரம்பத்தில் தமிழ்ப் படங்களில் முயன்று ஒத்து வராமல் ஹிந்திக்குப் போய் அங்கே ஒரு பெரிய ரவுண்ட் வந்துவிட்டார்.

2003 களில் ஆரம்பத்தில் கவர்ச்சியான ரோல்களில் நடித்து பிரபலமானாலும் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேடி நடிக்கத் துவங்கினார்.

34 வயதாகும் வித்யா பாலன் தனது நீண்ட நாள் காதலரும் யு டி.வி.யின் இயக்குநருமான சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் இன்று மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் நடைபெற்றது.

திருமணத்தில் தென்னிந்திய முறைப்படி சிவப்பு நிற சேலையணிந்திருந்தார் வித்யா பாலன். கணவர் சித்தார்த் கபூர் பஞ்சாபி முறைப்படி குர்த்தா அணிந்திருந்தார். இவர்கள் திருமணமும் தமிழ் முறைப்படியும் அத்தோடு பஞ்சாபி முறைப்படியும் நடந்தது.

விருந்தில் தமிழ்நாட்டு உணவு பரிமாறப்பட்டது.

 இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்திற்கு நெருங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். திரையுலகப் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்பட்வில்லை.

ப்ரியங்கா சோப்ரா இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார்.

ரசிகப் பெருமக்களே.. உங்கள் மனக்கவலை புரியுது… என்ன பண்றது ? டர்ட்டி பிக்ஸர் – பார்ட் 2 எல்லாம் இனி வர வாய்ப்பே இல்லை.

மனசைக் கல்லாக்கிக்கிட்டு வித்யா பாலன் அம்மணிக்கு வாழ்த்துச் சொல்லுங்க.. “எங்கிருந்தாலும் வாழ்க!”

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.