’தாண்டவம்’ பட பஞ்சாயத்துகளுக்கு அப்புறம் தான் இருக்கிற இடம் தெரியாமல் ஒரு படம் இயக்கிவிட்டுத்தான் வெளி உலகுக்கே தலைகாட்டவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் இயக்குனர் விஜய்.
அவரது அதிர்ஷ்டம் எவ்வளவோ நக்கல், நையாண்டிகளை மீறி விஜய் படம் கிடைத்ததும், அதன் படப்பிடிப்பு முழுக்கமுழுக்க
மும்பையில் அமைந்ததும்.
ஆனால் அந்த அதிர்ஷ்டத்துக்கு அற்ப ஆயுள்தான். படம் தொடங்கிய சில நாட்களிலேயே தலைப்புச்சிக்கல் வந்து இயக்குனர் விஜயின் இடதுதோளில் அமர்ந்துகொள்ள, அடுத்து தொடர்ச்சியாக சோதனை மேல் சோதனைகள்.
வழக்கமாக நோகாமல் நொங்குதிங்கும் இ.விஜய் இப்படத்துக்கு ‘தங்கமகன்’ என்று பெயர் சூட்டி, அதற்கு எதிராக சில கமெண்டுகள் கிளம்ப ‘கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணி சொந்தமா திங்க் பண்ணுங்க சார்’ என்று விஜய் எகத்தாளம் செய்ததாக ஏகப்பட்ட செய்திகள். அதை ஒட்டி படப்பிடிப்பு துவங்கும் முன் உதவியாளர்களிடம் இம்சை பண்ணி வாங்கிய நூத்திச்சொச்சம் இம்போஸிசன் தலைப்புகளுடன் தான் தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே ஆஜராகிறாராம் இ. விஜய்.
அடுத்து நடந்தது ஒரு அல்ப சம்பவம். இ. விஜயின் முதல் படமான ‘பொய்சொல்லப்போறோம்’லிருந்து அவரது ஆஸ்தான நடிகராய் விளங்கி வருபவர் நாசர். அதன் தொடர்ச்சியாக இப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் கமிட் பண்ணப்பட்டு, ஒரு ஹெவி அட்வான்ஸ் வாங்கி, மும்பையில் நடந்த படப்பிடிப்புகளிலும் கலந்துகொண்டிருந்த நாசரை. திடீரென நடிகர் விஜயின் தந்தை, நாசரின் மனைவி கமீலா தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக தூக்கச்சொல்ல, அதையும் சிரமேற்கொண்டு செய்துமுடித்தார் இ. விஜய்.
மூன்றாவதாக நடந்தது ஒரு முத்தாய்ப்பானசம்பவம். படத்தின் நாயகியான அமலாபாலுக்கு, படப்பிடிப்பு துவங்கிய ஆரம்ப சில தினங்களில் இ. விஜய் தனது ரூமுக்கு அடுத்த ரூமில்… சேச்சே இந்த மேட்டர் வேண்டாமே?
இப்படி நாளுக்கு நாள் இ. விஜயின் கைவரிசை இறங்கி, அவர் ஏறத்தாழ படப்பிடிப்பில் நடிகர் விஜயின் கைப்பாவையாகவே செயல்பட ஆரம்பித்துவிட்டதாக, மும்பையிலிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் நவில்கின்றன.
ஆனால், ‘இவை அத்தனையும் பொய். இயக்குனர் விஜயை நான் ஒருநாளும் எடுபிடியாக நடத்தவில்லை’ என்று மிகவிரைவில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் இ.விஜய். [ ’இ’.யை இயக்குனர் என்ற ஒரே அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேறு அர்த்தங்களுக்கு நமது சங்கம் பொறுப்பாகாது]