parathesi-1

முன் எச்சரிக்கையாகவே ஒரு தகவலைச் சொல்லிவிடுகிறோம். இந்தச் செய்தி ஒரு ஜோஸியமோ, தீர்க்க தரிசனமோ அல்ல. அதே போல் ‘அலெக்ஸ் பாண்டியன்’ ரிசல்ட்டுக்கும் இந்தச் செய்திக்கும் கூட ஒரு சம்பந்தமும் இல்லை.

அட ஒரு துண்டு பீடி மேட்டருக்கு எதுக்கப்பா இவ்வளவு பீடிகை?
அதாகப்பட்டது இன்று காலை ஒரு பிரிவியூ தியேட்டரில் ’அலெக்ஸ்பாண்டியன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கார்த்தி, சூர்யா போன்ற படைபரிவாரங்களுடன் ‘பரதேசி’ பாலாவின் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.’ நாம எடுக்குற சொந்தப்படங்கள்தான் சரியா போணியாக மாட்டேங்குது.அதனால இனிமே படங்களை வாங்கி ரிலீஸ் பண்றதுல முழுமூச்சா கவனம் செலுத்துவோம்’ என்று நேற்று ‘அலெக்ஸ் பாண்டியன்’ இரண்டாவது ஆட்ட[ம் கண்ட] ரிசல்டைப் பார்த்துவிட்டு தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தாராம்.
அதை ஒட்டி ரா’வோடு ராவாக, ஞானவேல் பாலாவுக்கு போனைப்போட, ‘பரதேசி’யை வாங்க ஆளில்லாமல் தவிக்கும்போது, இப்படி ஒரு கும்கி யானையா என்று அவரும் பரதேசியாக ச்சீ,.. ஸாரி,.. பரவசமாகி, உடனே படத்தைப் போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டாராம்.
ஸோ, இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ‘பரதேசி’ யை ஞானவேல் ராஜா வாங்கி, அவரது பேனரில் ரிலீஸ் பண்ணக்கூடும்.
படங்களை ரெண்டாவது வாட்டி பாக்கலாம். இந்தமாதிரி நியூஸை ஒருவாட்டிதான் படிக்கனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.