‘ தமிழ்சினிமாவுக்கு நடிக்க வந்த புதுசுல சிம்புதான் பயங்கர அலும்புன்னு கேள்விப்பட்டேன். ஆனா ‘பிரியாணி’ கிண்டுற சென்னை-28 பசங்க அட்டகாசம் தாங்க முடியலை. ஒரு அஞ்சாறு மாசமா பிரியாணியே சாப்பிடாத பாய்ஸ் கிட்ட ஒரு குட்டி ஆடு கிட்டினா எப்பிடி முட்டி மோதுவாங்களோ, அதுமாதிரி என்னை ஆட்டிப்படைக்கிறாய்ங்க’
என்று தனக்கு வேண்டியவர்களிடம் அழுது புலம்புகிறாராம் ஹன்ஷிகா மோதவானி.
இயக்குனர் வெங்கட் பிரபுவில் துவங்கி, சுமார் 38 பசங்களை உள்ளடக்கிய அந்த நண்பர்கள் குழாம், தினமும் இரவுப் பார்ட்டிகளுக்குச் சென்று தங்கள் உறவுகளை வளர்த்து வருவது ஊரறிந்த உண்மை.
வேறு வழியின்றி ‘பிரியாணி’ துவங்கிய சமயத்தில் அவர்களுடன் ஒன்றிரண்டு முறை பார்ட்டிகளுக்கு கம்பெனி கொடுத்த ஹன்ஷிகாவை, விடாமல் துரத்தி, தற்போது, அவர்களது ஏதாவது ஒரு குரூப்பிலிருந்து’ ‘ஃப்ரியா நீ, பார்ட்டிக்கு வர்றியா நீ?’ என்று எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்களாம். சில சமயங்களில் அதிகாலையில் ஆதவன் அட்டெண்டன்ஸ் கொடுத்த பிறகும் கூட இந்த டார்ச்சர் தொடருவது உண்டாம்.
’படத்துக்குத்தான், இன்னும் கிளாமர்,.. இன்னும் கொஞ்சம் தூக்கலான்னு என்னை உரி உரின்னு உரிச்சானுங்க. ஷூட்டிங் முடிஞ்சபிறகாவது நிம்மதியா விடுறானுகளா? என்ற புலம்பலுடன்,‘பிரியாணி’படம் எப்படா முடியும், அந்த மொத்த டீமுக்கும் பிரியாவிடை குடுத்து அனுப்பலாம்’ என்று ஹன்ஷியக்கா வேண்டாத தெய்வமில்லை’ என்கிறது அவரது ‘நெருங்கிய’ வட்டாரம்.